அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி அமலாக்கதுறை விசாரணையில் இருந்து தப்பித்து வரும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் ஒட்டுமொத்த ஆளும் கட்சியையும் அதிர செய்து இருக்கிறது. அதிலும் SFCO அதிகாரம் தெரிந்து பலரும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையின்போது நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இதய நாளங்களில் மூன்று அடைப்புகள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு நாளை காலை பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவின் விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பிறகே முடிவெடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க தற்போது SFCO எனப்படும் தீவிர பண மோசடி குறித்து விசாரணை செய்யும் சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணை வளையத்தில் இறங்க போகிறதாம். சமீபத்தில் திமுகவினர் தொடர்புடைய இடங்களிலும், செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்து இருக்கிறதாம்.
மேலும் மிக பெரிய அளவில் கருப்பு பணம் வெள்ளையாக மாற்ற பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறதாம், இந்த விவகாரம் நிதி அமைச்சகத்திற்கு தெரியவர உடனடியாக தற்போது SFCO எனும் புலனாய்வு அமைப்பை அனுப்பி விசாரணை செய்யவும் அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறதாம்.
தமிழக அரசு சிபிஐக்கு கொடுக்கப்பட்ட பொது அனுமதியை திரும்ப பெற்ற நிலையில் தற்போது SFCO மூலம் விசாரணையை தொடங்க மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக களம் இறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
SFCO தமிழகத்தில் செந்தில் பாலாஜியை விசாரணை செய்ய தொடங்கினால் அது 2ஜி வழக்கை காட்டிலும் நாடு முழுவதும் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும் எனவும் பல மேல் மட்ட தலைவர்கள் சிறைக்கு செல்லவும் பலர் தங்கள் பதவியை இழக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி ED விசாரணைக்கு ஓத்துழைப்பு கொடுத்து இருந்தால் அது திகார் சிறையோடு போயிருக்கும் தற்போது இதயத்தில் அடைப்பு என மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சையை தேடி சென்று இருப்பதால் செந்தில் பாலாஜியை தவிர்த்து இன்னும் பலரும் சிக்க இருப்பதாக கூறப்படும் தகவல் ஆளும் கட்சி வட்டாரத்தை அதிர செய்து இருக்கிறது.