24 special

நெருங்குகிறது செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய திருப்பம்...!

Senthil balaji,senthil balaji wife
Senthil balaji,senthil balaji wife

ஒருபுறம் அமலாக்கத்துறை வழக்கு மறுபடியும் அறுவை சிகிச்சை என செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய கட்டம் நெருங்குவதால் அலறியடித்து செந்தில் பாலாஜியின் மனைவி செய்த காரியம் தற்பொழுது பரபரப்பாகி உள்ளது. 


அமலாக்கத்துறை தனது கட்டுப்பாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அழைத்து சென்ற பொழுது ஏற்பட்ட நெஞ்சுவலின் காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி, காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் காவேரி மருத்துவமனையில் கூறினார்கள். இதனையடுத்து அவருக்கு வழங்கப்படும் சில மருந்துகள் நிறுத்தப்பட்டு நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறும்போது, 'அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரத்த நாளங்களில் உள்ள அழுத்தங்களில் இருந்து அவரை காப்பதற்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் பிளட் தின்னர் என்கின்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த சிகிச்சைக்கான மருந்தை எடுத்துக்கொண்டு, 4 அல்லது 5 நாட்கள் இடைவெளி விடவேண்டும். பின்னர் தான் அறுவை சிகிச்சை செய்யவேண்டும். அதனால் நாளை அதிகாலை அறுவை சிகிச்சை செய்யப்படும். காவேரி மருத்துவமனையுடன் நாங்கள் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறோம். நாளை காலை அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை  மேற்கொள்ளப்படுகிறது.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியதற்கான உடல் தகுதியுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தப்போக்கு சிக்கல் இருக்காது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் நாளை அதிகாலை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. அறுவை சிகிச்சைக்கும் அமலாக்கத்துறை விசாரணைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

பொதுவாகவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றி நாம்  மனிதாபிமான முறையோடு அணுக வேண்டிய ஒரு செயல். தனக்கு ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளது என்பதை பற்றி தெரியாமலே அமைச்சர் இவ்வளவு காலம் வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறார். அப்பல்லோ மருத்துவமனையில் பிரபல மருத்துவர்கள் செங்கோட்டுவேல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என உறுதிப்படுத்தி உள்ளார். ஒன்றிய அரசின் இஎஸ்ஐ மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என உறுதி செய்துள்ளனர். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அமைச்சர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்' என்று கூறினார் அமைச்சர் மா,சுப்பிரமணியன். 

இதனையடுத்து நாளை அதிகாலை செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. மறுபுறம் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது, இந்த மனுவின் மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கோரி செந்தில் பாலாஜியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 

இப்படி ஒருபுறம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை என அறிவித்துள்ள நிலையில், மறுபுறம் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரிக்க வேண்டும் என கோரிய மனு மீது விசாரணை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இப்படி அவசர அவசரமாக செந்தில்பாலாஜியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.