ஹைதராபாத் : பிஜேபியின் நான்காவது தேசிய செயற்குழு கூட்டம் தெலுங்கானாவில் நடைபெற்றுவருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பிஜேபி மாநில முதல்வர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். தெலுங்கானாவில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி இந்த கூட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்திநகர் மாவட்டத்தில் 750 படுக்கை வசதிகள் கொண்ட பி.எஸ்.எம் மருத்துவமனையை திறந்துவைத்து உரையாற்றினார். அவர் கூறுகையில் " எதிர்கட்சிகளால் நடத்தப்படும் மாநில அரசுகளின் அர்ஷியல் சமாதான அரசியல் மற்றும் வகுப்புவாதம் மற்றும் தீவிரமயமாக்கலுக்கு வழிவகுத்துள்ளது.
நாட்டில் சமாதான அரசியல் வம்ச அரசியல் சாதிவெறி அழியும்போது இந்தியா விஸ்வகுருவாக முன்னேறும். அடுத்து வரபோகும் 30-40 வருடங்களும் பிஜேபியின் சகாப்தமாகவே இருக்கும். பிஜேபியின் அரசியல் வளர்ச்சி மற்றும் செயல்திறன் அரசியல். 2002 கலவரத்தின் பின்னணியில் பெரிய சதி எதுவும் இல்லை என சிறப்பு புலனாய்வுக்குழு கூறியுள்ளது.
அதையே உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது" என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா " பிரதமர் மோடி மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு சில போலியான ஊடகவியலாளர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளது.
அமித்ஷா ஜி கொண்டுவந்துள்ள தீர்மானங்கள் வரவேற்கத்தக்க வகையில் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி நாட்டின் வளர்ச்சியிலேயே அதிக கவனத்தை கொண்டுள்ளது. தென்மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகாவில் பொம்மை சிறப்பாக திட்டங்களை அமுல்படுத்திவருகிறார். சாதனைகள் மக்களிடம் விளக்கப்பட்டு வருவதுடன் பிஜேபி குறிப்பிடத்தக்க வகையில் கர்நாடகாவில் வளர்ச்சியடைந்துள்ளது" என அசாம் முதல்வர் குறிப்பிட்டார்.