வரும் ஜூலை 3 ஆவது வாரத்தில் பாத யாத்திரை மேற்கொள்ள பக்காவா திட்டம் போட்டு வரும் பாஜக குறித்து தான் இப்போதைக்கு பேச்சு. அதிலும் அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த பாதயாத்திரியை துவங்கி வைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா வர உள்ளதாக அண்ணாமலை தெரிவித்து இருக்கார். பாத யாத்திரை மேற்கொள்வதற்கு முன்பாக 4 நாள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்காம்.
நிலைமை இப்படி இருக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், பாஜகவினர் எப்படி செயல்பட வேண்டும்....எந்த மாதிரியான முன்னேற்பாடுகளுக்கு தயாராக இருக்க வேண்டும்... எப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஸ்கெட்ச் போட்டு விட்டார்களாம் பாஜக.
எப்போது பார்த்தாலும் ஊழலுக்கு எதிராக பேசும் பாஜக... இந்த முறையும் டிஎம்கே files பார்ட் 2 வெளியிட தயாராகி வருவதுடன்... அதிர்ச்சி அளிக்கும் விதமாக பல பேரின் சொத்து பட்டியல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அட இது மட்டும் தானா சங்கதி என பார்த்தால், அண்ணாமலை எங்கவெல்லாம் பாதயாத்திரை மேற்கோள் உள்ளாரோ... அந்தந்த பகுதியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அப்படியே கொத்து கொத்தாக .. குரூப் குரூப்பாக ஆயிரக்கணக்கான மக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் கசிந்து இருக்கு.
இதற்கு முன்னதாக, சென்னை வந்தால் அண்ணாமலையை பார்க்க முடியவில்லை என பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்தவர்களும்.. யாரை பார்த்தால் பாஜகவில் சேரலாம்.... யார் முன்னிலையில் பாஜவில் இணையலாம் என்றெல்லாம் பல கேள்விகளுடன் இருந்த மக்களை நேரில் சந்திக்கும் போது அவர்கள் அப்படியே பாஜகவில் இணைய உள்ளார்களாம். தமிழகம் திராவிட மண் பாஜக எல்லாம் காலூன்ற முடியவே முடியாது என சொல்லி வந்த காலம் சென்று இப்போது 4 mla க்களை கொண்டு இருக்காங்க. அடுத்து வர உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் எப்படியும் கணிசமான எண்ணிகையிலாவது பாஜக தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டும் மிக தீவிரமாக இறங்கி வேலை செய்வதால் ஆளுங்கட்சிக்கு இது கொஞ்சம் தலைவலி கொடுக்க தொடங்கி இருக்காம்.
அண்ணாமலை பாத யாத்திரை செல்லும் போது கட்சியினர் அல்லாத பொதுமக்கள் தான் அதிகம் பாத யாத்திரை செல்ல உள்ளதாக தகவல் கிடைச்சி இருக்கு... இப்படி ஒரு பாதயாத்திரை தமிழகம் முழுவதும் நடந்தால், அது பாஜவுக்கு மிக பெரிய வலிமையாக மாறும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதும் ஆளு திமுக மட்டும் சவாலாக இருக்கப்போவது இல்லையாம். அதிமுகவிற்கு கூட சவாலாக இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதுநாள் வரை திராவிட காட்சிகள் தானே மாறி மாறி ஆண்டு வந்திருக்கு. இப்போது ஊழலுக்கு எதிராக நிற்கும் கட்சியாக இருக்கும் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால் தான் என்ன என்ற மன நிலையில் மக்களும் பேச தொடங்கி இருக்காங்க. அதுவும் அதிமுக உடன் பாஜக கூட்டணி இருந்தாலும் தன் கட்சியை ளர்பது மட்டும் தான் தன் வேலை என இறங்கி இருக்கும் அண்ணாமலை பின் செல்ல ஒரு கூட்டம் தயாராகி இருக்கு. இப்படியான சமயத்தில் தான் ஓர் அதிர்ச்சி ரிபோர்டும் ஆளுங்கட்சிக்கு சென்று உள்ளதாம்.
தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை, ஊழல் வழக்கில் கைதான செந்தில் பாலாஜி விவகாரம்.. இன்னும் பிற அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் என தொடர்ந்து வெளிவர உள்ளதால் இது மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல்.. அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு பின் மூளை முடுக்கில் உள்ள மக்களுக்கெல்லாம் அண்ணாமலை பற்றி பாசிட்டிவான பேச்சு வர தொடங்கும். கண்டிப்பா இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு தமிழகத்தில் அடுத்த மைல்கல்லாக அமையும் என்ற விவரம் ஆளுகட்சிக்கு சொல்லப்பட்டு இருக்காம்.
இதை எல்லாம் சமாளிக்க இதுபோன்ற விஷயத்தை கையில் எடுத்து சமாளிக்க வேண்டும் என்ற திட்டத்தில் இப்போதே ஆளுங்கட்சியும் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் சமீபத்தில் சென்னை தாம்பரம் வந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கோ .. தமிழிக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்திற்கு மட்டும் தலைவர் அல்ல.... இந்தியாவிற்கே வளரும் தலைவராக உருவெடுத்து வருகிறார்.. ஒரு முறை பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் ஊழல் இல்லாத ஆட்சியை காண்பிக்கிறோம் என சொல்லியது அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
பொதுவாக அரசியல் தலைவர்கள் இப்போதெல்லாம் மக்களை சந்திக்க பாத யாத்திரை மேற்கொள்வது ஒரு வழக்கமாகவே நடைமுறைக்கு கொண்டுவருகிறார்கள்...ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்திரை .. பவன் கல்யாண் மேற்கொண்ட யாத்திரை என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள பாதயாத்திரை எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.