24 special

ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு....!கலக்கத்தில் திமுக அரசு...!

Rn ravi ,mk stalin
Rn ravi ,mk stalin

முதல்வர் ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜியால் எந்த அளவு கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு செல்வாக்கு கிடைத்ததோ அதை காட்டிலும் தற்போது திமுக ஆட்சிக்கே சிக்கல் உண்டாகும் சூழல் தற்போது உருவாகி இருக்கிறது.


அதிலும் குறிப்பாக ஆளுநர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று முக்கிய வார்த்தைகள் தான் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பலரை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது.

அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கியதற்கான காரணம் குறித்து 5 பக்கங்கள் கொண்ட கடிதத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியுள்ளார் அதில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது முதல் செந்தில் பாலாஜி என்ன தவறுகள் செய்தார் அவர் திமுகவிற்கு வந்த பிறகு என்ன வழியில் விசாரணை மாறியது என்பது வரை அதிரடியாக ஆளுநர் குறிப்பிட்டு இருப்பது தான் திமுக நேரடியாக கலங்க காரணமாக அமைந்து இருக்கிறது.

ஆளுநர் ரவி எழுதிய கடிதத்தில், “செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் 2 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.அமைச்சர் பதவியில் இருப்பதால் அவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள். அமைச்சர் பதவி என்பது செந்தில் பாலாஜிக்கு பாதுகாப்பு கவசமாக உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தந்ததாக புகார் வந்தது.அப்போது அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுகவில் இருந்து அமமுக கட்சிக்கு சென்றவுடன் அவர் மீதான விசாரணை நடைபெறுகிறது.திமுகவில் சேர்ந்து அமைச்சரான பிறகு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற விமர்சனங்களை கருத்தில் கொண்டு தான் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிருந்து நீக்குகிறேன். வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியது அவர்களிடம் இருந்து ஆதாரத்தை பறித்து சென்றது என பல உதாரணம் உள்ளது.திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராகாவிட்டதால் புகார் கொடுத்த மனுதாரர்கள் சமரசம் செய்து கொண்டிருப்பார்களா என்ற சந்தேகம் எழுவதாக உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்புகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மே 31-ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க முதல்வருக்கு பரிந்துரை கடிதம் எழுதினேன். அதனை முதல்வர் ஏற்கவில்லை.செந்தில் பாலாஜி இலாகா மாற்றப்பட்டபோது அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்ற தகவலை என்னிடம் தெரிவிக்கவில்லை. இதனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது தவறானது என்று கடிதம் எழுதினேன்.

இரண்டு முறை வலியுறுத்தியும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க முதல்வர் மறுத்துவிட்டார். அமைச்சரவையில் செந்தில் பாலாஜி இருந்தால் கூடுதலாக அவருக்கு தைரியம் வரும்.உதாரணத்திற்கு செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற போது அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் நியாயமான விசாரணை நடைபெறாது.

செந்தில் பாலாஜி மீது நியாயமான விசாரணை நடத்தவில்லை என்றால் அரசியலமைப்பின் செயல்பாடு கேள்விக்குள்ளாகும். ஆகையால் அவர் அமைச்சரவையில் நீடிக்கக்கூடாது.சாதாரண காலங்களில் அமைச்சரவை அறிவுறுத்தலின்படி தான் நான் செயல்படுவேன். ஆனால் இந்த விவகாரத்தில் நான் பல முறை செந்தில் பாலாஜியை நீக்க முதல்வரை அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் அவர் பாரபட்சமாக செயல்படுகிறார் என்பதையே காட்டுகிறது.

ஆகவே அரசியலமைப்பு சட்டம் 154, 163,164 ஆகிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை நீக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி அமைச்சர் பதவி நீக்கம் நிறுத்தி வைத்துள்ளதாகவும் விரைவில் மத்திய அரசின் அடர்னி ஜெனரல் கருத்தை கேட்டு ஆளுநர் இறுதி முடிவு எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில் அது உறுதியாகி இருக்கிறது.

ஆளுநர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவு போட்டதை நிறுத்தி வைத்து இருக்கிறாரே தவிர  உத்தரவை திரும்ப பெறவில்லை என்பதால் தற்போது தான் இதில் சட்ட சிக்கலே தொடங்கி இருப்பதாகவும் விரைவில் நீதி மன்றத்தில் மிக பெரிய எதிர்வினையை செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்து இருப்பதால் ஸ்டாலின் சந்திக்க போவதாகவும் ஆட்சிக்கே சட்ட ரீதியாக சிக்கல் உண்டானாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.