அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான மறு நிமிடமே கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உண்டாகலாம் என்பதால் முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களை கண்கானிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர், இப்படி காவல்துறையினர் ஒன்று நினைத்து பாதுகாப்பை பல படுத்த ஆனால் கரூரில் வேறு மாதிரி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கரூரில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக போராட்டங்கள் நடக்கும் என போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியை கைது செய்ததை வரவேற்று பட்டாசு வெடித்த சம்பவம் ஆளும் திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை வரவேற்று அகில இந்திய சட்ட உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாக கரூர் ரவுண்டான பகுதியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்க கையில் ஸ்வீட் பாக்ஸ் மற்றும் வெடியுடன் ஒரு தரப்பினர் வந்தனர்.
அவர்களை பார்த்த போலீசார் அமைச்சருக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வருகிறார்கள் என முதலில் நினைத்தனர் ஆனால் அவர்களோ செந்தில் பாலாஜியை கைது செய்த மத்திய அரசின் நடவடிக்கை மிக மிக முக்கியமான ஒன்று, இன்றுதான் கரூருக்கு உண்மையான விடுதலை இந்தாங்க ஸ்வீட் என கொடுத்தனர்.
இதை பார்த்து அரண்டு போன போலீசார் பட்டாசுடன் வந்த நபர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். எங்கள் அண்ணன் செந்தில் பாலாஜி மீது கை வைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பேசிய நிலையில் இன்று சொந்த ஊரான கரூரில் வெடி வெடித்து கொண்டாட வந்த நபர்களால் சொந்த ஊரிலே செந்தில் பாலாஜிக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதை படம் பிடித்து காட்டி இருக்கிறது.
கோவை குசும்பு கேள்வி பட்டு இருக்கிறோம் இது என்ன கரூர் குசும்பா என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்க தொடங்கி இருக்கின்றனர்.செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் தற்போது திமுகவிற்கு கடும் குடைசலை கொடுத்து இருக்கிறது. அதே நேரத்தில் கரூர் மக்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்து இருக்கிறதாக கூறப்படுகிறது.