24 special

தொடர் தோல்வியால் தொங்கி கிடக்கும் அதிமுக.... கட்சியினருக்குள்ளே வெடித்த விஸ்வரூபம்....தலைமறைவான முன்னாள் அமைச்சர்

EDAPPADI , MR VIJAYABASKAR
EDAPPADI , MR VIJAYABASKAR

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மேலும் தமிழக பாஜக இந்த தேர்தலில் தனி கட்சியாக தன் தலைமையிலான கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவிற்கு அடுத்த நிலையை தமிழக பாஜக பெற்றுள்ளதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டையும் இழந்து படுதோல்வி அடைந்துள்ளது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடக்க இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடப் போவதில்லை என்றும் தேர்தலை புறக்கணிப்பை  தெரிவித்துள்ளது. 


இதற்கிடையில் அதிமுக நிர்வாகி ஒருவர் மீது மற்றொரு அதிமுக நிர்வாகி மோசடி வழக்கை பதிவு செய்துள்ளது அதிமுகவில் நிலவி வருகின்ற எதிர்ப்பு அலைகளை வெளிகாட்டுகிறது. அதாவது கரூர் மாவட்டத்தில் திமுகவிற்கு போட்டியாக திகழ்ந்து வருகின்ற எம் ஆர் விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் நில அபகரிப்பு செய்துள்ளதாக மற்றொரு அதிமுக நிர்வாகியே அவர் மீது புகார் அளித்துள்ளார். அதாவது கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர் அதிமுக கரூர் மாவட்டத்தின் முக்கிய நபராக அறியப்படுகிறார். இவர் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ் பி அலுவலகத்தில் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தான் அதிமுகவில் கரூர் மாவட்டத்தில் முக்கிய நபராக இருப்பதால் கட்சியில் எனக்கும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கும் இடையே பல ஆண்டுகளாக கொடுக்கல் வாங்கல் இருந்து வருகிறது.

ஆனால் திடீரென்று தோரணக்கல்பட்டிமற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தான் கூறும் நான்கு பேரின் பெயரில் எழுதி தர வேண்டுமென்று விஜயபாஸ்கர் மிரட்டியதாகவும்,  இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் தனது மகள் ஷோபனா பெயருக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அவற்றை விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மகள் ஷோபனா மற்றும் மனைவியை மிரட்டி போலி ஆவணங்களை வழங்கி மோசடி செய்து சொத்துக்களை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது இருந்த பயத்தினால் இதுவரை புகார் அளிக்காமல் இருந்ததாகவும் தற்போது தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற காரணத்தினால் புகார் கொடுத்திருப்பதாகவும் பிரகாஷ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் ஏழு பேர் மீது கடந்த ஒன்பதாம் தேதி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையிலே விஜயபாஸ்கர் முன் ஜாமின் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த முன்ஜாமின் மனு வருகின்ற 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி கடந்த சனிக்கிழமை இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டுள்ளது. அதனால் 100 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனால்  விஜயபாஸ்கர் தற்போது தலைமறைவாகியுள்ளார். ஏற்கனவே கட்சி இருக்கும் நிலையில் எந்த நேரத்தில் காணாமல் போகும் என்ன செய்வது என தெரியாமல் அதிமுக தலைமை திக்கு முக்காடி வருகிற நிலையில் கட்சி நிர்வாகிகளுக்குள்ளே இது போன்ற பிரச்சனைகள் அதனால் வழக்குகளும் புகார்களும் ஒவ்வொன்றாக முளைப்பதால் அதிமுக தலைமை சோக கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.