தமிழ் திரையுலகில் குறிப்பிட்ட ஐந்து படங்கள் மட்டுமே இயக்கி தமிழ் மற்றும் ஹிந்தி சினிமா வரையிலும் ஒரு முக்கிய இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி! இவர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரா ஆகிய இரு படங்களிலும் உதவி இயக்குனராக செயல்பட்டுள்ளார். இதனை அடுத்து 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி நல்ல வெற்றியைக் கண்டார். ஏனென்றால் இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் ஆர்யாவின் காதல் காட்சிகள் நயன்தாராவிற்கு தனியாக இருக்கும் காதல் காட்சி, ஆர்யாவிற்கு தனியாக நஸ்ரியா உடன் இருக்கும் காதல் காட்சிகள் அனைத்துமே தமிழ் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. எப்படி அட்லிக்கு இந்த திரைப்படம் தமிழ் இயக்குனராக ஒரு நல்ல அறிமுகத்தையும் வரவேற்பையும் கொடுத்ததோ அதேபோன்று நயன்தாராவிற்கு நல்ல கம்பேக்கை கொடுத்தது.
இருப்பினும் ராஜா ராணி திரைப்படம் எடுப்பதற்கு முன்பாகவே தற்போது வளர்ந்து வருகின்ற சூப்பர் ஹிட் நடிகரான சிவகார்த்திகேயனை வைத்து முகப்புத்தகம் என்னும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார் அட்லீ! ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு விஜயுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களில் இயக்கி அந்த மூன்றிலும் பெரும் வெற்றி கண்டார் அட்லி. இதற்குப் பிறகு தமிழ் திரையுலகை தாண்டி ஹிந்தி திரையுலகிற்கு சென்ற அட்லி ஹிந்தி முன்னணி நடிகரான ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படம் வட இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை கண்டது. அதோடு ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்த்தின் வசூலை தாண்டி ஜவான் திரைப்படம் 1125 கோடி வசூல் சாதனையை படைத்தது. இருப்பினும் தமிழில் இந்த திரைப்படம் கடும் விமர்சனத்தையே சந்தித்தது.
ஏனென்றால் அட்லி இயக்கம் திரைப்படங்களில் சில காட்சிகள் காப்பியடித்த காட்சிகள் என்று ஒரு விதமான விமர்சனங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இருந்து வருகிறது.அதற்கு ஏற்றார் போல் ஜவான் திரைப்படமும் வெளியான பொழுது தமிழில் வெளியான மற்ற 10 படங்களின் கலவை தான் ஜவான் திரைப்படம் என பெருமளவில் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் கோலிவுட்டில் இந்த திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி கோலிவுட் சென்ற அட்லி தமிழ் சினிமா பிரபலங்களையும் டெக்னீசியர்களையும் அழைத்துக் கொண்டு சென்று கோலிவுடல் அறிமுகப்படுத்தி உள்ளார் அந்த வகையில் நயன்தாராவிற்கு ஜவான் படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஹிந்தியில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் அனிருத்திற்கும் ஹிந்தியில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்க இருந்த ஒரு படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்த படம் ட்ராப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ஜவான் திரைப்படத்தில் பெரும் வெற்றியை கண்ட அட்லி 40 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றதாகவும் இதனை அடுத்து தனது சம்பளத்தை மேலும் உயர்த்தி அல்லு அர்ஜுனை வைத்து எடுக்க இருக்கும் படத்திற்கு கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாகவும் அதனால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் ஷாருக்கான் வைத்து மாஸ் ஹிட் கொடுத்த அட்லி அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்கிலும் கிட் கொடுக்கலாம் என நினைத்தார் ஆனால் தனது சம்பளத்தை உயர்த்தி பேராசையில் அல்லு அர்ஜுனை இயக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளார் என இதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.