24 special

எல்லை தாண்டி செல்லும் பேருந்து நிலைய விவகாரம்... நடிகை ஜெயலட்சுமியின் வீடியோ!

Jayalakshmi, Stalin
Jayalakshmi, Stalin

மக்களின் பயணத்தினை எளிதாக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு என்று தனித்துவமாக வந்த இந்த பேருந்து நிலையத்தில் SETC, பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்ற அறிவிப்பு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கக்கூடாது கிளாம்பாக்கத்தில் இருட்னது தான் பேருந்துகளை இயக்கவேண்டும் மீறினால் கிரிமினல் நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் கூறினார்கள்.


இந்நிலையில் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம் இனி செயல்படாது, அதனால் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தை பயன்படுத்த அறிவுறுத்தினார்கள். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலயத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதால் செங்கல்பட்டு நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பொங்கல் முதல் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களுக்கு போதிய வசதி இல்லாமல் இருப்பதாக குற்றம் சாட்டி வந்தனர். இதுநாள் வரை போதிய வசதி இல்லை என்று பயணிகள் திணறி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகை ஜெயலட்சுமி எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கும் கிளாம்பாக்கம் கோயம்பேடு விவகாரம். முறையான முன்னேற்பாடுகள் இல்லாமல் மக்களை வாட்டி வதைத்து இன்னல்களுக்கு உள்ளாக்குவது தான் திராவிட மாடலா? சர்வாதிகாரப் போக்கை உணர்ந்து காலம் கடந்தாவது மக்கள் துயர் துடைக்க முன் வருவாரா முதல்வர் ஸ்டாலின் அவர்கள்? என கேள்வி எழுப்பி தற்போது வைரலாகி வருகிறது.