24 special

ஒரே போன் கால் துறைமுருகன் பல்டி அடித்து பேசிய விஷயம்...

duraimurugan, udhayanithi
duraimurugan, udhayanithi

திமுக தமிழகத்தில் தனது ஆட்சி நிறுவியதிலிருந்து மக்கள் மத்தியில் சிறுக சிறுக தனது செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது மேலும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளில் திமுக கூறிய ஒரு வாக்குறுதியை கூட இன்றுவரை முழுமையாக நிறைவேற்றாமல் ஆசிரியர் சங்கங்கள் போக்குவரத்து கழகங்கள் அரசு ஊழியர்கள் விவசாய சங்கங்கள் என அனைத்து சங்கங்களையும் போராட்டத்தில் தள்ளியது தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு திமுக அரசு மீதான பின்னடைவு அதிகமானது! இதே வரிசையில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் தற்பொழுது ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெற்றெடுப்பதும் திமுகவின் நிலவி வரும் ஊழல் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதோடு அமைச்சரவையில் ஒரு அமைச்சர் கூட நேர்மையானவர்கள் இல்லையோ இஎன மக்கள் கேள்விகளை முன் வைக்கும் அளவிற்கு சர்ச்சையானது.


அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி நிலாக்க இல்லாத அமைச்சராக மாறி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனது அமைச்சர் பதவி இழந்து அவரும் சிறை தண்டனை பெற்றார். இந்த வரிசையில் அமைச்சர் துரைமுருகனும் சிக்க உள்ளார் என்பது அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படும் மற்றொரு செய்தியாகும் ஏனென்றால் சமீபத்தில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையும் அது தொடர்பாக கனிமவளத்துறை அதிகாரிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக கைது செய்து விசாரணை மேற்கொண்டதும் துரைமுருகன் செய்த ஊழலை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் அடிபட்டது. அதிலும் குறிப்பாக முதலில் மண் குவாரிகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை பெரும்பாலான மணல் குவாரிகளை சீல் வைத்து மூடியதோடு அடுத்த சில நாட்களுக்கு பின்னர் திடீரென மற்றொரு சோதனையிலும் இறங்கியது அமலாக்கத் துறை! அந்த சோதனையில் முறைகேடாக மணல் அள்ளப்படுவதையும் மணல் அள்ளப்படும் அளவும் விற்கப்படும் அளவும் வேறுவாக இருப்பதையும் கண்டறிந்து பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. 

இப்படி திமுகவின் முக்கிய மற்றும் மூத்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் சில ஊழல் வழக்குகள் மற்றும் அமலாக்கத் துறையின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் அவர்களை வைத்து எப்படி 2024 ஆண்டு தேர்தலில் எதிர்கொள்வது என்று அறிவாலய தலைமை யோசித்து இதனால் அவர்கள் யாருக்கும் சீட்டு தருவது குறித்த யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 2019-ல் வேலூர் தொகுதியில் நின்று எம்பி ஆன  அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்திற்கு இந்த முறை சீட்டு கொடுக்கப்படாது என்ற தகவல் அறிவாலயத்தில் பேசப்பட்டதாகவும் அதை பற்றி அமைச்சர் துரைமுருகன் உதயநிதியிடம் கேட்ட பொழுது உங்கள் அமைச்சர் பதவியே உங்களிடம் இருப்பது பெரிய விஷயம்தான் இதில் உங்கள் மகனுக்கு வேற மீண்டும் சீட்டு வேணுமா என கேட்டதாகவும், மேலும் தற்போது உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு உங்களது பதவி இதுவரை உங்களிடம் இருந்து பறிக்கப்படாமல் உள்ளது என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள் என்றும் சவுண்டு விட்டாராம்.. இதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து அமைச்சர் துரைமுருகன், அரசியலில் வளர பணிவு முக்கியம் அந்த பணிவு உதயநிதியிடம் உள்ளது மேலும் உதயநிதி இந்த இயக்கத்தை நடத்தும் காலம் மீண்டும் ஒரு பொற்காலமாக அமையும் என உதயநிதியை புகழ்ந்து பேசி உள்ளார் ஒரு மூத்த தலைவர் தன்னைவிட வயது கம்மியான உதயநிதியை இப்படி புகழ்ந்து பேசலாமா என அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்களை பெற்றுள்ளது.