Cinema

ரஜினிகாந்த்க்கு தொடரும் பிரச்சனை... சிக்கி நிற்கும் பிரபலங்கள்!

Ishwarya, Rajinikanth
Ishwarya, Rajinikanth

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா துறையில் பின்னணி பாடகியாக சினிமாவில் அறிமுகமானவர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதையெல்லாம் கடந்து திரையுலகில் இயக்குனராக பிரபலமானவர். முதன் முதலாக கணவரான தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் வைத்து மூன்று படத்தை இயக்கினார். அந்த படத்தின் கொலவெறி பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரலானது. அந்த படமும் இன்று வரை ரீ-ரிலீஸ் ஆகி வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது ஐஸ்வர்யா மூலம் ரஜினிகாந்த் பல பிரச்சனைகளை சமாளித்து வருகிறார். 


மூன்று படத்தை தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா, அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு இயக்குனர் வேலையை கொஞ்சம் தள்ளிவிட்டு கணவர் தனுஷ் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து வரை சென்றது திருமண வாழ்கை. தற்போது மீண்டும் படத்தை இயக்க முடிவெடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வளர்ந்து வரும் நடிகர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் வைத்து ஒரு படம் இயக்க முடிவெடுத்தார். அந்த படத்தில் தனது அப்பாவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க கேட்டு கொண்டதன் பேரில் அவரையும் ஓகே சொல்லியிருந்தார். 

லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்திற்கு லால் சலாம் என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை மும்பையில் நடக்கும் கலவரத்தை மையப்படுத்தி அதில் நடிகர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டி கொள்ள சூப்பர் ஸ்டார் காப்பாற்றுவது போல் இருக்கும். மேலும், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்துள்ள இந்த படத்தை காண மிகவும் ஆர்வத்துடன் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். இதில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளதால் மேலும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரஜினி லால் சலாம் படத்தில் முஸ்லீம் தோற்றத்தில் இருப்பதாகவும் சில தகவல் கசிந்தன. 

இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது அப்போது படத்தில் நடித்த ரஜினிகாந்த் சம்பந்தமான சில காட்சிகள் கொண்ட வீடியோ காணாமல் போனதால் ரிலீஸ் செய்யமுடியவில்லை. பொங்கலுக்கு வெளியிடலாம் என்று எதிர்பார்த்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் முன்னாள் கணவரும் ரஜினிகாந்தின் மருமகனான தனுஷின் கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு வெளியிட இருந்ததால் அதன் காரணமாகவே லால் சலாம்  படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் எழுந்தது. ஒரு பக்கம் தனுஷுக்கு விட்டு கொடுத்தார் என்று பேச்சு எழுந்தது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால் லால் சலாம் படத்தை எந்த நிறுவனமும் வாங்க முன்வரவில்லை என்பதே உண்மையாம். 

இதனையெடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கேட்ட உதவியின் பேரில் நேரடியாக ரஜினிகாந்தே சன் டிவி நிறுவனத்திடம் பேசியுள்ளாராம். அந்த நிறுவனமும் ரஜினி கேட்டதன் பேரில் வாங்கி கொள்ள ஒப்புதல் தெரிவித்ததாக சில தகவல் கசிந்தன. இணையத்தில் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன பண்ணுவது என்பது தெரியாமல் லால் சலாம் படத்தை வாங்கியதாக பேசப்பட்டது. அதன் பின் தற்போது பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. மேலும் ரஜினியின் விடுபட்ட காட்சிகள் காணாமல் போனதால் அதனை இயக்குனரே தனது கை காசை போட்டு எடுக்க வேணும் நிலை ஏற்பட்டது. அப்போதும் ரஜிகாந்த உதவியை ஐஸ்வர்யா கேட்க லைக்கா நிறுவனத்தின் உதவியை கேட்டுள்ளார் ரஜினி அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் லைக்கா நிறுவனமும் சரி என்று தலையாட்டி விட்டதாம். 

இந்த லால் சலாம் படத்தை பிரபல ஒடிடி தலமான நெட்ப்ளிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தில் ரஜினி நடித்துள்ளதால் நிச்சயம் படம் வெற்றி பெரும் என கூறப்படுகிறது. முதலில் தனுஷை பிரிந்த மகளுக்கு  ஆதரவாக வந்த ரஜினிகாந்த் அவரது படத்திலும் தன்னையே ஈடுபடுத்தி கொண்டதால் ஒரு பக்கம் நெகிழ்ச்சியாகவும் பேசப்படுகிறது விமர்சனமாகவும் பேசப்படுகிறது. இன்னும் படம் வெளியாவதற்குள் வயதான காலத்தில் இப்படியா சித்திரவதை பண்ணுவது என்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.