தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி திமுக, அதிமுக, பாஜக உள்ளிட கட்சிகள் பங்கேற்று காரசாரமான விவாதம், பல்வேறு நிகழ்வுகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இன்று கூட்டத்தொடரின் இறுதி நாள் நடைபெற்று வருகின்றது.நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையின் தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சியான அதிமுக நிர்வாகிகள் கேள்வி கேட்கும் காணொளி ஒளிபரப்புவதை தடை செய்யப்பட்டுள்ளன என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ., ஓஎஸ் மணியன் பேசுகையில் "நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை, இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கப்படுகின்றனர், அவர்களது உடமைகளை சேத படுத்துகின்றனர் என்று வாதத்தை முன் வைத்து.
தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில், 530 வாக்குறுதிகள் இடம்பெற்றன. அவற்றில் பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை, என ஓஎஸ் மணியன் பட்டியல் போட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு தான் முடித்திருக்கிறது, இதனை நீங்கள் கடைசி ஆண்டில் தான் கேட்க வேண்டும். இன்னும் எங்கள் ஆட்சிக்கு காலம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அப்படி வாக்குறுதிகளை நாங்கள் இப்பொது நிறைவேற்றவில்லை என்றால் கூட, அடுத்த 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக ஆட்சி தான் வரும் என்றார்.
இப்படி பேசிய இவரது வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் தகளது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். அதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாட்டில் கொலை சம்பவம் அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இன்மை, மேலும் அனைத்து துறையில் உள்ளவர்களும் போரட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அந்தவகையில் அரசு போக்குவரத்துக்கு துறை ஊழியர்கள் ஓய்வூதியம் வழங்கவில்லை என்று போராட்டம் நடத்தினர். மேலும், தற்போது 3வகை ஆசிரியர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வேண்டி ஆசிரியர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேல் போராட்டத்தை கையில் எடுத்தனர்.
நேற்று முதல் செவிலியர்கள் பணி நிரந்தரம், மகப்பேறு காலத்தில் விடுப்பு போன்று பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடங்கினர்.அவர்களையும் காவலர்களை கொண்டு குண்டுகட்டாக கைது செய்தனர். மேலும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எந்த ஒரு பேச்சும் நடத்தவில்லை என்று விவசாயிகள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். நாங்குநேரில் பள்ளி மாணவர்கள் அரிவாளை கையில் எடுத்தது போன்று பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் எதுக்கு திமுகவை வெற்றி பெற செய்தோம் என்ற நிலைக்கு யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
இதில் அடுத்த முறையும் நீங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது பொதுமக்களாகிய எங்களை மீண்டும் முட்டாள் என நினைத்து விட வேண்டாம் என்ற கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.தற்போது வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையிலும் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வருகிறது. உரிமை தொகை விண்ணப்பத்தில் கையூட்டல் போன்ற பல்வேறு இன்னல்கள் மக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கொடுக்கும் பதிலடியை காணலாம் அதன் பின் நீங்கள் மறுபடியும் ஆட்சிக்கு வருவதை யோசிக்கலாம் என்று நெட்டிசன்கள் மீம்ஸை பதிவிட்டு வருகின்றனர்.