Cinema

லியோ பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது....மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

actor vijay
actor vijay

லியோ படம் இந்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் "நா ரெடி"பாடல்களில் ஆடிய நடன கலைஞ்சர்கள் சுமார் 1300 பேருக்கு சம்பளம் முறையாக வழங்கவிலை என்று நேற்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க திரளாக சென்றனர். இச்சம்பவம் சமூக தளத்தில் வைரலாக அதற்கு விளக்கம் கொடுத்து சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.மகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ ஆரம்பத்தில் இருந்தே பல வகையான குற்றச்சாட்டுகள் தொடங்கியது, அதாவது நா ரெடி தான் பாடல் வெளியான பின் அதில் உள்ள லிரிக்ஸ் இளஞ்சர்களை சீரழிக்கும் விதமாக உள்ளதாகவும் விஜி புகைபிடிப்பது போல் உள்ளதால் வளர்ந்து வரும் தலைமுறைக்கு முன் உதாரணமாக இல்லாமல் இப்படி நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்று சர்ச்சை எழுந்தது. 


அந்த வகையில் நா ரெடி தான் பாடலில் நடனமாடிய நடனக்குழு கலைஞ்சர்கள் சம்பளம்  வழங்கவில்லை என்று கூறி புகார் அளித்தனர். அதற்கு ஆர்.கே.செல்வமணி பெஃப்சி தலைவர் லியோ படக்குழுவினரின் சம்பள விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, "லியோ படத்தில் பணிபுரிந்த சில நடன கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லையென்ற செய்தி அறிந்தேன். லியோ படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 2,000 கலைஞர்களை வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கொரியோகிராஃபர் தினேஷ் மாஸ்டரிடம் கேட்டுள்ளார்".தமிழக திரை மற்றும் சின்னத்திரை நடன கலைஞர்கள் மற்றும் கொரியோகிராஃபர்கள் சங்கத்தில் அதிகளவில் 600 கலைஞர்கள் மட்டுமே உள்ளனர்.

ஏனெனில் இந்த சங்கத்தின் அதிகபட்ச உறுப்பினர் வரம்பே ஆயிரம்தான். அதிலும் 400 கலைஞர்கள் பல்வேறு படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால், எஞ்சிய 600 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இதுபோன்ற சூழலில் சங்க உறுப்பினர்கள் அல்லாத நடன திறமையும், அழகும் கொண்ட ஆண் மற்றும் பெண்கள் நடனமாட வைக்கப்படுவார்கள். அவர்கள் மாடல்கள், ரிச் பாய்ஸ் அல்லது ரிச் கேர்ள்ஸ் என்று அழைக்கப்படுவார்கள். உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மூன்று வேளை உணவுடன் ரூ.1,000 படித்தொகை வழங்கப்படும்.பாடலின் படப்பிடிப்பு 6.6.2023 முதல் 11.06.2023 வரை சென்னை பனையூரில் உள்ள ஆதிஸ்ரீராம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்துடன், இந்த உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு எவ்வளவு ஊக்கத்தொகை வழங்கப்படவேண்டும் என்ற பேச்சுவார்த்தை நடந்தது.அதில் நாளொன்றுக்கு ரூ.1,750 மட்டும் வழங்கவேண்டும். 6 நாட்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் படித்தொகை சேர்த்து ரூ.10,500 வழங்கப்படவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் ரூ.94,60,500 வழங்கப்பட்டது.

இதை தவிர சங்கத்துக்கு சேவை கட்டணமும் செலுத்தப்பட்டது.தற்போது சில நடனகலைஞர்கள் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இது தவறான தகவல். சங்க உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவரகள் என அனைவருக்கும் ஊக்கத்தொகை அவர்கள் வங்கிக்கணக்கில் வழங்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்து இந்த பிரச்னைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.எனினும் இன்று லியோ படத்தின் மூன்றாவது சிங்கிளான அன்பெனும் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்த பாடல் காதல் ரொமாண்டிக் கலந்த வண்ணம் உள்ளதாக போஸ்ட்டரை பார்க்கும்போது தெரிகிறது. இதில் எந்த பிரச்னை தொடங்கப்போவது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இதுவரை வெளியான 2 சிங்கிள் பாடலிலும் சர்ச்சை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.