2014ம் ஆண்டு நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான படம் "ஜிகர்தண்டா" படம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். முதல் பாகத்தில் நடிகர் சித்தார்த் சண்டை காட்சிகளும் மிக அருமையாக அமைந்தது. பாபி சிம்ஹாவின் நடிப்புகளுமம் பக்கா மாஸாக அமைத்திருந்தது. வில்லன் பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளை கட்சிதமாக நடித்திருப்பர். சுமார் 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் கலந்து கொண்டு பேசியது, 'இப்படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தீபாவளிக்கு இந்த படத்தினை திரையில் பார்ப்பீர்கள் என்று தெரிவித்தார். முதல் பாகத்தை விட 2ம் பாகத்துக்கு அதிக அளவில் முதலீடு போடப்பட்டுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ஜிகர்தண்டா முதல் பாகம் நான் பண்ணவேண்டியது. கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் கதை கூறினார் அப்போது நான் தெலுங்கு படத்தில் நான் பிசியாக இருந்ததால் முதல் பாகத்தில் என்னால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது மிஸ் செய்துவிட்டேன் என்று கவலைப்பட்டேன்.இப்போது கடவுள் கொடுத்த வாய்ப்புதான் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. எனது வாழ்க்கையில் யாரெல்லாம் எனக்கு கத்து கொடுக்கிறார்களோ அவர்கள் எல்லாம் எனக்கு குரு என்று தான் சொல்லுவேன். ரஜினி சாரை நான் குரு என்று தான் சொல்லுவேன். கார்த்திக் சுப்பராஜும் இப்போது குரு தான். அவர் என்ன சொன்னாரோ அது தான் இந்தப்படம். கார்த்திக் சுப்பராஜ் இந்தப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கி உள்ளார். படப்பிடிப்பு நடைபெற்ற இடம் ஒன்றில் மக்களுக்காக சாலை அமைத்து தந்துள்ளார்கள். அடுத்தவர்களுக்கு உதவிய காரணத்திற்காகவே இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். சந்தோஷ் நாராயணன் சாரோட பெரிய ரசிகன் நான்.
நிறைய மேடைகள் இருக்கிறது. இந்தப்படத்தை பற்றி நிறைய பேச வேண்டும். எஸ் ஜே சூர்யா சாருடன் நடித்தது மகிழ்ச்சி என்று தெரிவித்தார். எஸ் ஜே சூர்யா நடித்த திரைப்படங்களில் தனக்கென்று அந்த படத்தில் ஒரு பாத்திரத்தை உருவாக்குவார். அந்த வகையில் சிம்பு உடன் நடித்த மாநாடு படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருப்பார் அதில் தனக்கான காட்சிகளை மிகவும் பொருத்தமாக நடித்திருப்பார். சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்திலும் அவர் சிறப்பாக நடித்திருப்பார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்-ல் நிச்சயம் மிரடியிருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.