வைரலான வீடியோ.. ஓட்டம் எடுத்த நபர்... உதயநிதிக்கு கிடைத்த அதிர்ச்சி...!
தமிழகத்தில் மிக பெரிய அளவில் திமுக முன்னெடுத்த திட்டத்திற்கு தற்போது திமுக ஆட்சியில் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் எதிர்ப்பு உண்டாகி இருப்பதும் பெற்றோரே பேப்பர் கொண்டு சென்றவரை விரட்டி அடித்த சம்பவமும் அரங்கேறி இருப்பதும் ஆளும் கட்சியின் மேலிடம் வரை சென்று அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
நீட் தேர்வை மையமாக வைத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் சம்பவங்கள் அரங்கேரின, பாஜக பலமுறை எடுத்து சொல்லியும் அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கள் கேட்காமல் நீட் தேர்வை எதிர்த்தது, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது, நீட் தேர்வு மூலம் ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கு மருத்துவம் கிடைப்பதை திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்கின்றன விரைவில் பொது மக்கள் நீட் தேர்வு குறித்து அறிந்து கொள்வார்கள் அன்று பொதுமக்கள் மத்தியில் கூட நீட் தேர்விற்கு ஆதரவும், எதிர் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிர்ப்பும் உண்டாகும் பாருங்கள் என பாஜக கூறியது.
பாஜக கூறியது போலவே தற்போது நடந்த முடிந்த நீட் தேர்வில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் கையில் எதிர் மறை கருத்து கொண்ட நாளிதலை ஒருவர் கொடுக்க அவரை சூழ்ந்து கொண்ட பெற்றோர் விரட்டி அடித்தனர், பிள்ளைங்க எவளோ கஷ்டப்பட்டு நீட் தேர்வு எழுதுறாங்க, நாங்க எவளோ கனவில் இருக்கிறோம் இங்கு வந்து நெகட்டிவ்வா கட்டுரை எழுதிய பேப்பரை கொடுக்குறீங்க ஏன் பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டு சாகணுமா? இதை வைத்து அரசியல் செய்யணுமா என வெளுத்து எடுத்தனர் பெற்றோர்.
இந்த வீடியோ கடந்த இரண்டு நாட்களாக வைரலாகும் நிலையில் தற்போது மற்றொரு நிகழ்வு அரங்கேறி இருக்கிறது, வழக்கமாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பேசிய திமுக நீட் தேர்வு நடக்கும் நிலையில் வாயே திறக்கவில்லை, நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறினால் இனி மக்கள் ஏற்க மாட்டார்கள், ஒரு வேலை நீட் தேர்விற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் அப்போது ஏன் கடந்த காலங்களில் மத்திய பாஜக அரசு மீது பழியை போட்டீர்கள் என மக்களே கேட்பார்கள் எனவே நாம் அமைதியாக மாறிவிட வேண்டியது தான் என கப் சுப் ஆகி இருக்கிறதாம் திமுக.
வழக்கமாக நீட் தேர்விற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த முறை நீட் தேர்வு நடைபெற்ற போதிலும் அதற்கு வாய் திறக்காமல் இருப்பது, மக்கள் குறிப்பாக பெற்றோர்களின் மன நிலை என்ன என்பது நீட் தேர்விற்கு எதிராக பேப்பர் விநியோகம் செய்த நபருக்கு உண்டான எதிர்ப்பு மூலமே வெளிவந்து இருப்பது உள்ளிட்ட பல தகவல்கள் ஆளும் கட்சி கவனத்திற்கு சென்று இருப்பதே காரணமாக பார்க்க படுகிறது.