24 special

ஆளுநரை தரை குறைவாக விமர்சித்த துரைமுருகன்..! திமுகவிற்கு வந்த அடுத்த வினை

Duraimurugan  , Rn ravi
Duraimurugan , Rn ravi

ஆளுநரை தரை குறைவாக விமர்சித்த துரைமுருகன்..! திமுகவிற்கு வந்த அடுத்த வினை


தமிழக ஆளுநரை தரக்குறைவாக விமர்சனம் செய்த திமுகவை சேர்ந்த மூத்த அமைச்சர் துரைமுருகன் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது திமுகவிற்கும் அதிர்ச்சி கிடைக்கும் வகையில் பரவும் தகவலால் முதல்வரின் தூக்கம் மீண்டும் போச்சு என மூத்த பத்திரிகையாளர்களே பேசும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தமிழகத்தில் ஆளுநர் ஆர் என் ரவி பொறுப்பேற்றதிலிருந்து ஆளுநர் மற்றும் ஆளும் திமுக இடையில் பல்வேறு வகையில் முரண் ஏற்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர் மத்திய அரசை மத்திய அரசு என்றுதான் கூற வேண்டும் என கூறியதாக இருக்கட்டும், தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்து தமிழகம் என அழைக்கப்பட வேண்டும் என இப்படி நிறைய கருத்துக்களை தமிழக ஆளுநர் திமுகவினருக்கு எதிராக கூறியதால் கடுப்பான திமுகவினர் தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என குடியரசு தலைவர் வரை சென்று மனு கொடுத்தனர். மேலும் அதனை தொடர்ந்து மு க ஸ்டாலின் தனது திமுக கட்சியை ஒரு திராவிட மாடல் என்று அழைப்பதற்கும் மறுப்பு தெரிவித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் பேட்டி அளித்த ஆளுநர் ரவி அவர்கள் திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியான கொள்கை என விமர்சித்தார். மேலும் சட்டசபை உரையில் சிலவற்றை படிக்காமல் புறக்கணித்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் பல விஷயங்களில் திமுகவின் அரசியலை விமர்சித்து செயல்பட்டு வந்ததை திமுக தலைவர் ஸ்டாலினும் திமுகவை சேர்ந்த எம் பி கனிமொழி போன்ற முக்கிய தலைவர்களும்,திமுகவின் சில முக்கிய பிரமுகர்களும் இதை விமர்சித்து அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு நிறைவு விழாவில் அவர்கள் ஆட்சியில் படைத்த சாதனையை கூறும் வகையில் ஒரு  சாதனை விளக்க பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், சில திமுக எம்பிக்களும் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரை முருகன் பேசுகையில், 'எம்ஜிஆர் என்னை அவர் பக்கம் அழைத்தார், நான் அதற்கு நான் கலைஞர் என் தலைவர் நீங்கள் என்னை வாழ வைத்த தெய்வம் என்றேன். இந்த கொள்கையில் நான் உறுதியாக இருந்ததை அவர் பாராட்டினார். சந்தர்ப்ப சூழ்நிலையில் கட்சியை காட்டிக் கொடுப்பவன் கட்சியிலிருந்து ஒதுங்குபவன் யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாது. கலைஞரின் ஆற்றல் ஸ்டாலினிடம் இருக்கிறது, இந்த இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்திக் காட்டும் ஆற்றல் ஸ்டாலினிடம் இருக்கிறது என்பதை நிரூபித்து காட்டி விட்டார்.  இப்படி இருக்கையில் சட்டமன்றத்தில் எழுதி அனுப்பிய தீர்மானங்களை கவர்னர் பார்த்துவிட்டு மாறுதல் கூறி திருப்பி அனுப்பினாலும், அதை நாம் மீண்டும் சட்டம் ஆக்கி அனுப்பினால் அவர் மாற்றாமல் கையெழுத்து போட வேண்டும் என இந்தியாவின் அரசியல் சட்டம் சொல்கிறது. எனக் கூறிய துரைமுருகன். மேலும் கவர்னர் அவர்களே நீங்கள் பீகார் காரர், திராவிட மாடல் என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியாது. திராவிட மாடல் என்பது ஒரு அரசியல் கோஷம் என கூறுகிறீர்கள். கோஷம் என்பது ஓர் உணர்ச்சி இல்லையா, ஒரு பாரதம் ஒரு இந்தியா என்பது கோஷம் இல்லையா?  எதிர்க்கட்சியை கூட சமாளித்து விடுகிறோம், ஆனால் கவர்னர் எதிர்க்கட்சியை போல் அரசாங்கத்தை குறை சொல்வதால் அவருக்கு இப்படி பதில் சொல்ல வேண்டி இருக்குது. இதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்குதா, இல்ல ஒக்காந்து தூண்டி விட்டுக்கிட்டு இருக்குதா என தெரியல, ஆனால் எந்த கவர்னரும் இப்படி லூசு மாதிரி பேசியது கிடையாது, ஆனால் இதற்கிடையிலும் எங்கள் ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்' என பேசினார்.

ஆளுநருக்கு திமுகவினருக்கும் என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும், ஆளுநரை ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்து லூசு என்ற வார்த்தையால் குறிப்பிட்டு இருப்பது அவமரியாதையானது ஆகும் என சர்ச்சை எழுந்துள்ளது. இப்படி பொதுக்கூட்டத்தில்  வைத்து ஒரு ஆளுநரை லூசு என்ற வார்த்தையால் குறிப்பிட்டிருக்கக் கூடாது என பல்வேறு தரப்பினர் தற்போது அமைச்சர் துரைமுருகன் மீது விமர்சனம் வைத்து வருகின்றனர். மேலும் இது வருங்காலங்களில் திமுகவிற்கு பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தும் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக ஆளுநர் ரவியை பொறுத்தவரை நேரடியாக விமர்சனம் எதையும் உடனடியாக அரசிற்கு கொடுக்க மாட்டார் அவருடைய பாணியே சத்தம் இல்லாமல் ஆளும் கட்சி மீதான தனது நிலைப்பாட்டை தெரிவிப்பது மட்டும்தான், முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் மீது கடந்த முறை சட்டமன்றத்தில் வைத்தே விமர்சனம் வைத்தார், அதற்கு இரண்டு மாதம் பிறகு ஆளுநர் ஆங்கில நாளெடுக்கு கொடுத்த பேட்டியில் தமிழகத்தில் காவல்துறை அரசியல் மயமாகி போயிருக்கிறது, கவர்னரான எனது காரின் மீது கற்களை வீசிய நபர்கள் மீது புகார்கள் அளித்தும் கைது செய்யவில்லை என தெரிவித்தார்.

இது சாதாரண விஷயமில்லை அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் உள்ளிட்ட பல சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கவர்னர் பேசி இருப்பது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தது, முதல்வர் சட்ட பேரவையில் வைத்து ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த நிலையில் ஒரே ஆங்கில நாளேடு பேட்டி மூலம் மீண்டும் ஒட்டு மொத்த ஆளும் கட்சியும் ஆளுநருக்கு எதிராக பேச வேண்டிய சூழல் உண்டாகி இருப்பதுடன் காவல்துறை மீதும் விமர்சனம் எழுகிறது.

அப்படி இருக்கையில் திமுகவின் மூத்த அமைச்சராக இருக்க கூடிய துரைமுருகன் ஒருமையில் பேசியதை நிச்சயம் ஆளுநர் மாளிகை கவனத்தில் கொண்டு இருக்கும் இதற்கு பின்னால் விரைவில் ஆளுநர் மூலம் மிக பெரிய ஆப்பு வரும் பாருங்கள் என அடுத்து கூறுகின்றனர் ஆளுநர் ரவியின் கடந்த கால நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் கவர்னராக அவர் பணியாற்றிய போது எது போன்று பதிலடி கொடுத்தார் என்பதை அறிந்த பத்திரிகையாளர்கள்.