24 special

ஜோதிமணியை விரட்டி அடித்த பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!

Jothimani
Jothimani

தமிழகத்தில் நடைபெறும் நாடளுமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இண்டியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக திமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பிரச்சாரத்திற்கு சென்ற அவரை பொதுமக்கள் உள்ளே விடாமல் எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்யும் கட்சிகள் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளது. 


                                                                        

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்,19 தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்காக தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக போய் கொண்டு இருக்கும் வேளையில் கரூர் தொகுதி, மக்கள் கவனம் செலுத்தும் பகுதியில் ஒன்றாக கரூர் தொகுதி மாறியுள்ளது. கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க கூடாது அதிலும் ஜோதிமணிக்கு கொடுக்க கூடாது என்று காங்கிரஸ் நிர்வாகிகளே போர் கொடி தூக்கினர்.

                                                                 

ஆனாலும், ஜோதிமணி காங்கிரஸ் டெல்லி தலைமையிடம் பேசி மீண்டும் கரூர் தொகுதியை தனக்கு உரித்தாக்கினார். தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடும் அவர் பொதுமக்கள் பெரியதாக ஆதரவு கொடுப்பதில்லை என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆதரவு கொடுக்காமல் இருப்பதாக வருத்தத்தில் ஜோதிமணி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ஆதரவு மக்களிடம் கிடைக்காததால் சமீபத்தில் கூட பிரச்சாரத்தின் போது தனது மாவை நினைத்து மிகவும் வருந்தி கண்ணீர் விட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கு அரசியல் விமர்சகர்கள் பலரும் பெரும் தலைவர்களை உதாரணம் காட்டி பாடம் கத்து கொடுத்து வந்தனர்.


இந்தசூழ்நிலையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, மிகத்தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஐந்து ஆண்டில் தனது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறி பொதுமக்கள் அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் அனைத்து இடங்களிலும் ஜோதி மணி விரட்டி அடிக்கப்படுகிறார். பொதுமக்களும் நேரடியாக ஜோதிமணியிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவரும் அதற்கு பதில் கூற முடியாமல் வெளியேறி வருவது தொடர்பான விடியோக்கள் இணையத்தில் வெளியானது.


இந்நிலையில், திருச்சி மாவட்டம் மருங்காபுரி தெற்கு ஒன்றியம் அடைக்கம்பட்டியில் ஓட்டு கேட்டு வந்த கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை சங்கு சத்தம் ஓலி எழுப்பி விரட்டி அடித்தனர். காரை விட்டு இறங்கி வந்து தெருவில் ஓட்டு கேட்க வந்த பொழுது பொதுமக்கள் இளைஞர்கள் ஒலி எழுப்பி அவரை வாக்கு கேட்க விடாமல் விரட்டி அனுப்பினர். உடனே ஜோதிமணியும் காரில் ஏறி செல்வது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு ஆயுதமாக கிடைத்துள்ளது தேர்தல் நேரத்தில்.


ஏற்கனவே, ஜோதிமணிக்கு  கிடைத்த ரகசிய சர்வேபடி இந்த தேர்தலில் 50000 ஒட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவலாம் எனவும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெறலாம் எனவும் கூறப்படுவதால், இது கரூர் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. இப்படியான நிலையில் ஜோதிமணியை விரட்டி அடிக்கப்படுவதால் பாஜக கட்சிக்கு வெற்றி என்பது சுலபமாக அமைந்துள்ளது. களம் நாளுக்கு நாள் மாறி பாஜகவுக்கு ஆதரவாக வந்த வண்ணம் உள்ளது. கரூர் ஜோதிமணியை விட பாஜக வேட்பாளர்க்கு சாதகமாக உள்ளதாகவே கூறப்படுகிறது.