நடைபெறவிருக்கும் நாடளுமன்ற தேர்தலுக்காக பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தி பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். இது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு கேள்விகளை எழுப்பியிருந்தார்..இதற்கு தமிழிசை சௌந்தராஜன் ஒரே வரியில் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் தொடங்க இன்னுமும் எட்டு நாட்களே உள்ள நிலையில் கோடை வெயிலையும் பொறுப்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தலை பொறுத்தவரைக்கும் நான்கு முனை போட்டி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பாஜக வேட்பாளர்கள் மட்டும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பாராட்டத் பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு தினங்களாக தமிகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி தமிழர்களின் பரம்பரியமான வேட்டி, சட்டையில் முதல் நாளில் சென்னையில் ரோடு ஷோ நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநில தலைவரை அண்ணாமலை பங்கேற்றார். அதனை தொடர்ந்து அடுத்த நாளில் வேலூரில் பாஜக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. தொடர்ந்து கோவையில் கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி தொகுதி வேட்பாளர் எல். முருகன், பொள்ளாச்சி வேட்பாளர் வசந்தராஜன் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரதமரின் வருகை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இணைய பக்கத்தில் பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே என்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை கொடுத்து இதற்கு பதிலளிக்க முடியுமா கேரண்டி கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் மோடி அவர்களின் வருகை என்பது மிக பெரிய வெற்றி. எடப்பாடி, செல்வ பெருந்தகை ஆகியோர் குறை சொல்வது போல் இல்லை. நான் ஒன்றை சொல்கிறேன் ....நான் மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் களத்தில் நிற்கிறேன். ஸ்டாலின் கூறுகிறார் பிரதம்மருக்கு தூக்கம் இல்லையென்று அதை சொல்லி அவருக்கு தான் தூக்கம் வருகிறது. ஸ்டாலின் 25 கேள்வி கேட்கிறார். இதனை நான் கேட்கிறேன் நீங்கள் மத்தியில் விபி சிங் முதற்கொண்டு மன்மோகன் சிங் வரை ஆட்சியில் இருந்திங்க அப்போது நீங்கள் எந்த அளவுக்கு தமிழர்களின் உரிமைகளை மீட்டு கொடுத்தீர்கள்? இது தான் நான் ஸ்டாலினுக்கு கேட்கும் கேள்வி என்று கூறியுள்ளார்.
முதல்வர் அடுக்கிய அத்தனை கேள்விக்கும் தென் சென்னை வேட்ப்பாளரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை ஒரே பதிலடி கொடுத்துள்ளார். தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை களத்தில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். களத்தில் தமிழிசை சௌந்தரராஜன் வேகமெடுக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.,