தமிழகத்தில் திமுக மக்களவை உறுப்பினர்கள் மாணவர்களின் கேள்வியை எதிக்கொள்ள முடியாமல் சிக்குவது இது முதல் முறையல்ல இரண்டு முறை மாணவர்கள் மத்தியில் சிக்கியுள்ளனர், தற்போது மாணவியின் கேள்விக்கு கனிமொழி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, மாணவியின் கேள்விக்கு தவறான பதிலை கொடுத்தார் அது பின்வருமாறு :
மாணவி: "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மது காரணமாக பல குடும்பங்கள் சீர்குலைந்து உள்ளன. மேலும் காவல்துறையினரே மது பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் மது விற்பனை நிறுத்தபடுமா?"
கனிமொழி: திமுக தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு என்று எதுவும் கூறவில்லை. அதேசமயம் மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கையை அரசு சார்பில் எடுக்கப்படும்
மாணவி: காவல்துறையினரே மதுக்கடைகளில் இருந்து பறிமுதல் செய்து கொண்டு வரும் மதுக்களை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். மது கடைகளில் காவல்துறையினருக்கு மது விற்பனை செய்யக்கூடாது.
கனிமொழி: மதுக்கடைகளில் தொழில் ரீதியாக பார்த்து யாருக்கும் மது வழங்குவது இல்லை வயது பார்த்து மட்டுமே வழங்கப்பட்டு வரப்படுகிறது. அதனால் காவல்துறையினர் என்று தனியாக தரம்பிரித்து மது வழங்காமல் இருக்க முடியாது . பணியில் இருக்கும் காவலர்கள் மது அருந்தி வந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்து முடித்து கொண்டார்.
மாணவி கனிமொழியை நோக்கி எழுப்பிய கேள்வியின் போது மாணவர்கள் மொத்தமாக கைதட்டி உற்சாகம் தெரிவித்தனர், இந்த சூழலில் கனிமொழி பொய்யான தகவலை மாணவர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார் என்றும் ஏற்கனவே கனிமொழி மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று பேசியிருந்த வீடீயோக்களை பகிர்ந்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இதே போன்று சிலகாலம் முன்பு ஆ.ராசாவை நோக்கி ஒரு மாணவி கேள்வி எழுப்பினார், மாநில பாடதிட்ட பள்ளிகள் குறித்து பெருமையாக பேசும் நீங்கள் உங்கள் பிள்ளைகளை மாநில பாடதிட்ட பள்ளியில் ஏன் படிக்க வைக்கவில்லை என கேட்க அதற்கு ஆ. ராசா விழி பிதுங்கி பேசியது பல காலமாக விவாத பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.
கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய மாணவியின் பெற்றோர் பாஜக ஆதரவாளர்கள் என திமுகவை சேர்ந்தவர்கள் இப்போதே சமூக வலைத்தளங்களில் எழுத, யாராக இருந்தால் என்ன கேட்கும் கேள்வி சரியானது தானே என அதற்கு ஆதரவும் உண்டாகி வருகிறது.
மொத்தத்தில் மாணவர்கள் மத்தியிலும் பாஜக புகுந்திருச்சு டோய் என பாஜகவினர் மகிழ்ச்சியுடன் மாணவியின் கேள்வியை பகிர்ந்து வருகின்றனர்.