24 special

வலதுகை இடது கை யார் வேண்டுமானாலும் வா..தயார்..., சற்று முன் நேரம் குறித்த அண்ணாமலை..!

annamalai
annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சற்று முன் அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளார் அதில் திருமாவளவனின் கட்சியை சேர்ந்த அவரது வலது கை இடது கை யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் அனைவரும் நேரடியாக சென்று திருமாவளவனிடம் உட்கார்ந்து பேசி ஒரு தேதியை முடிவு செய்து கூறுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து அண்ணாமலை தெரிவித்தது பின்வருமாறு :- அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26 ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம். 

அதன் பின்பு அண்ணன் தொல் திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும், தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன்.அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது தமிழக பாஜக அலுவலகத்திற்கு 26 ஆம் தேதி வரவேற்கின்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு! 

தலைப்பு: அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார், ஏற்கனவே அண்ணாமலை அழைப்பு விடுத்த சூழலில் திருமாவளவன் அது குறித்து நேரடியாக எப்போதும் பதில் கொடுக்காமல் மழுப்பலாக பதில் கொடுத்தார், இப்போது அண்ணாமலை நேரடியாக அழைப்பு கொடுத்து இருப்பதால் திருமாவளவன் விவாதத்திற்கு வருவாரா? அல்லது வழக்கம் போல் புறக்கணிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.