அதிமுக பாஜக கூட்டணி பிரிவு சமயத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது, அண்ணாமலை அவசரப்பட்டு விட்டார் தேவையில்லாமல் அண்ணாதுரையை பற்றி விமர்சித்து தமிழகத்தில் பெரிய கட்சியான அதிமுகவை விலகிச் செல்லுமாறு செய்து விட்டார் என பல அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்த இந்த நிலையில் அண்ணாமலை டெல்லி சென்று தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது, தமிழகத்தின் அரசியல் சூழல் எப்படி என விளக்கிவிட்டு வந்ததற்கு பிறகு அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது உறுதியானது.
ஆனால் அப்பொழுது ஒரு சிலர் கூறினார்கள் அண்ணாமலை சரியாக தான் கணக்குகள் போட்டு வருகிறார், அண்ணாமலை செய்த காரியத்தால் எதிர்கால பாஜகவிற்கு நல்லதே நடக்கும் அதன்படி தான் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இவர்கள் எல்லாம் அண்ணாமலை வளர்வதை கண்டு பிடிக்காமல் குறை கூறுகின்றனர் என ஒரு சில அரசியல் விமர்சகர்கள் அண்ணாமலை மீது நம்பிக்கை வைத்து கூறினார்கள்.
அது தற்பொழுது பலிக்கும் விதத்தில் தமிழக அரசியலில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது, குறிப்பாக கடந்த சில தினங்களாக அதிமுகவில் இருக்கக்கூடிய இரண்டாம் கட்ட தலைவர்கள் எதற்கு தேவையில்லாமல் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டோம் என புலம்பி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் எடப்பாடி பழனிச்சாமி கூட தென் மண்டலத்தில் நாம் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பொழுது மிகுந்த வலிமையுடன் இருந்தோம், ஆனால் தற்பொழுது நம் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது தேவையில்லாமல் தென் மாவட்டங்களில் இருக்கும் வாக்கு சதவீதம் அப்படியே பாஜகவிற்கு செல்லும்படி ஆகிவிட்டது.
குறிப்பாக ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் பாஜக பக்கம் இருப்பதால் பாஜக முன்பை விட அதிகமாக வலுப்பெற்று விட்டது என புலம்பியதும் தகவல்கள் கசிந்து உள்ளன. அரசியல் விமர்சகர் ஆன ரவீந்திரன் துரைசாமி தனியா youtube சேனலுக்கு அளித்த பேட்டிகள் கூறியுள்ளதாவது, 'அண்ணாமலையை மாற்றுவார்கள் என்ற வார்த்தைகளை குப்பையில் போடுங்கள். அண்ணாமலைக்கு மோடிக்கு மதிப்பு கூட்டுகிறார், மோடி அண்ணாமலையை நம்புகிறார், எடப்பாடிக்கு பலம் இல்லை என அண்ணாமலை மோடியிடம் விளக்கி உள்ளார்! அமித்ஷாவுடன் விளக்கி உள்ளார்! அதனால் அண்ணாமலை நடவடிக்கையை டெல்லி ஏற்று கொண்டது.
தேவையில்லாமல் கொங்கு மண்டலத்திலேயே எடப்பாடி மக்கள் விரும்பவில்லை, சசிகலா, பன்னீர்செல்வத்தை எடப்பாடி நீக்கியதை கொங்கு மக்கள் வெறுக்கிறார்கள். இதன் காரணமாக எடப்பாடிக்கு வரும் காலங்களில் பின்னடைவு என தெரிந்து அண்ணாமலை டெல்லியிடம் சொல்லி இருக்கிறார் அதை அமிஷா ஏற்று கொண்டு விட்டார் இனி எடப்பாடிக்கு சரிவு முகம் தான் எனக் கூறியுள்ளார்.
மேலும் அடுத்தப்படியாக ரவீந்திரன் துரைசாமி கூறும் பொழுது, 'அண்ணாமலை யாத்திரைக்கு மோடி வருவார் அப்பொழுது ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதில் கலந்து கொள்வார்கள் இதில் ஏன்டிஏ கூட்டணி எப்படி இருக்கும் என்ற தோற்றம் காட்டப்படும். இந்திய கூட்டணியின் புதிய முகம் இதில் பலருக்கு தெரியும், பாஜக தான் இதன் காரணமாக தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. தவிர எடப்பாடி பழனிசாமிக்கு இதில் தோல்வியே' என குறிப்பிட்டுள்ளார்.
தென்மாவட்ட பின்னடைவு, வழக்குகள் வேகமெடுக்கும் நிலை, பாஜக யாத்திரை வெற்றி, மோடியின் வருகையில் இடம்பெறாதது என எடப்பாடி தரப்பிற்கு வரும் தேர்தல் கண்டிப்பாக பின்னடைவு என தெரிந்து அதிமுக தரப்பு குறிப்பாக எடப்பாடி தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது..