24 special

தியேட்டரில் திருமணம் செய்து கொண்ட தம்பதி....வெறித்தனமான ரசிகரோ!

vijaiy
vijaiy

தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று விஜய் நடித்த திரைப்படம் லியோ இன்று காலை 9 மணிக்கு தியடரில் வெளியானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் படம் வெளியான பிறகு தியடரின் ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. விஜய் மீது ரசிகர்கள் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்துவது வழக்கம் அந்த வகையில் இன்று ரசிகர் ஒருவர் தனது காதலியை தியேட்டரில் மோதரம் மாற்றி திருமணம் நிச்சயம் செய்து கொண்டது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


புதுக்கோட்டை  மாப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், இவரும் வடக்கு மூன்றாம் வீதியை சேர்ந்த மஞ்சுளா இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் நாளை பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் நடைபெறவுள்ளது. இந்துக்களின் முறைப்படி நாளை திருமணம் நடக்கவுள்ளது.  வெங்கடேஷ் நடிகர் விஜயின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். 

இந்த காதல் ஜோடி இன்று லியோ முதல் காட்சியின் போது திருமண நிச்சயம் செய்துகொண்டனர். இது குறித்து வெங்கடேஷ் பேசுகையில் விஜயின் தீவிர ரசிகன் நான் அதனால தான் நான் விஜய் படத்திற்கு முன்பு நிச்சயம் செய்து கொண்டேன் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க மாவட்டத்தலைவர் முன்னிலையில் இந்த திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. லியோ படத்தின் போது தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தான் 8 மாதமாக காத்திருந்து இன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும், நாளை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் விஜய்யின் தீவிர ரசிகரான வெங்கடேஷ் கூறினார். 

நடிகர் விஜய் கிறிஸ்தவர் என்பதால் இந்து கிறிஸ்தவ  முறைப்படி மோதிரம் மாற்றி கொண்டோம், நாளை இந்து முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது என்று வெங்கடேஷ் கூறினார். தியேட்டரில் இருந்த ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் விறகை வருகிறது.