24 special

டெல்லி கொடுத்த சிக்னல்.. மூன்று போச்சே கதறும் எடப்பாடி தரப்பு!

Eps and ops
Eps and ops

நீதிமன்ற தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில் அவரிடம் இருந்து மூன்று முக்கிய நிலைகள் கைமீறி போய் இருப்பதும், ஆளுநர் விருந்தை புறக்கணித்து எடப்பாடி பழனிசாமி நேரடியாக டெல்லியை எதிர்க்க துணிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பொது செயலாளர் கனவிற்கு கிடைத்த அடியாகவும் அமைந்துவிட்டது.


தமிழகத்தில் அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு நடைபெற்ற யுத்தத்தில் முதலில் வெற்றி பெற்றதாக அறியப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கீழே விழுந்துள்ளார், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என நீதிமன்ற உத்தரவுகள் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியின் ஆதரவு, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என மூன்றுமே கைவிட்டு போகும் நிலை உண்டாகி இருக்கிறது, பாஜக மேலிடம் பல முறை ஒருங்கிணைந்த அதிமுக மட்டுமே திமுகவை வீழ்த்த உதவியாக இருக்கும், அதிமுகவில் ஒற்றை தலைமை உண்டானால் அதிமுகவால் திமுகவை வீழ்த்த முடியாது என பலமுறை பாஜக கூட்டணி கட்சி என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தெரிவித்து இருக்கிறது.

ஆனால் அதனை ஏற்காமல் எடப்பாடி பழனிசாமி தனியாக முடிவு எடுக்கவே டெல்லி சென்ற பழனிசாமியை பிரதமர் சந்திக்கவில்லை அதே நேரத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க சென்னை வந்தபோதும் பிரதமரை சந்திக்க அதிமுகவின் இரண்டு தரப்பும் நேரம் கேட்ட நிலையிலும் பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை ஒன்றுபட்ட அதிமுகவுடன் வாருங்கள் என்பதுமட்டுமே பாஜகவின் எண்ணமாக இருந்தது.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க தொடங்கி இருப்பது நேற்றைய ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதன் மூலம் தெளிவாக சிக்னல் கொடுத்து இருப்பதாக பார்க்கப்படுகிறது  , ஒவ்வொரு வருடமும், சுதந்திர தினத்தன்று ராஜ்பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம்.

 முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசுத்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், ஆளுநரின் விருந்தினர்கள் சுமார் 400 பேர் இந்த விருந்தில் கலந்து கொள்வார்கள். இந்த வருடம், ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்திற்கு முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், முன்னாள் மேற்குவங்க ஆளுநர் எம்.கே.நாராயணன், அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி விருந்துக்குச் செல்லவில்லை.

'உடல்நிலை சரியில்லாததால் அவர் பங்கேற்கவில்லை. விருந்தில் கலந்து கொள்ள வேண்டுமென்பது கட்டாயமல்ல' என்று விளக்கமளிக்கிறது எடப்பாடி தரப்பு. ஆனால், 'பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும், சில அரசியல் கணக்குகளுமே விருந்தை எடப்பாடி புறக்கணித்ததற்கு முக்கியக் காரணம்' எனவும் எதிர்க்கட்சி துணை தலைவர் என ஓபிஎஸ்சை குறிப்பிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு சென்றதால் படு கோவத்தில் இருந்து இருக்கிறார் எடப்பாடி.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி எப்போதுவேண்டுமானாலும் பாஜகவிற்கு எதிராக கூட்டணிக்கு எதிராக திரும்பலாம் என்பதால் இனி வரும் காலங்களில் முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது நடந்த வருமானவரித்துறை சோதனைகள் மூலம் அது தெளிவாக தெரியும் என்பது மட்டும் தெளிவாகி இருக்கிறதாம்.

மொத்தத்தில் பொது குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு செலவு செய்த மிக பெரிய தொகை தொடங்கி, தற்போது டெல்லியின் ஆதரவை மெல்ல மெல்ல எடப்பாடி பழனிசாமி தரப்பு இழந்து வருவது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்தை கேள்வி குறியாக மாற்றும் சூழலுக்கு சென்றுள்ளது.

மொத்தத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வந்து இருப்பதால் ஏற்கனவே அதிருப்தியில் உள்ள பல அதிமுக இரண்டாம்கட்ட தலைவர்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவ வாய்ப்பு இருப்பதால் அவர்களை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்ற யோசனையில் இறங்கி இருக்கிறதாம் சேலம் ஆர்மி.