பாஜகவினர் வெளியிட்ட பாடல் ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கலங்க செய்து இருக்கிறது, வரணும் மோடி என தொடங்கும் பாடலில் மோடி மற்றும் அண்ணாமலை ஆகியோரை பற்றிய வரிகள் இடம்பெற்று இருப்பதுடன் ஆளும் திமுகவின் பிரதான மந்திரமான திராவிட மாடல் மற்றும் விடியல் ஆட்சி போன்ற சொற்களை வைத்து பாடல் வரிகளை அமைத்து இருக்கிறார்கள்.
இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கி இருக்கிறது குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அண்ணாமலை வருகின்ற ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் நடை பயணம் தொடங்க இருக்கிறார், இதற்காக மாநிலம் முழுவதும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதன் முதல் படியாக மக்களை தயார் படுத்தவும், பாஜகவினரை உற்சாக படுத்தும் விதமாகவும் பாடலை பாஜகவினர் வெளியிட்டு இருப்பதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பாடலில் கடைசியாக இடம்பெற்று இருக்கும் வரிதான் திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்ய காரணமாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.. இதோ இணையத்தில் வைரலாகும் பாடல்..!