சமீபத்தில் instagram பிரபலமாக இருந்து பாடி பில்டராக மாறிய பிரியங்கா மஸ்தானி என்னும் பெண் ரொம்பவே வைரல் ஆகிகிட்டு வந்தாங்க!!சேலம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் இந்த பிரியங்கா மஸ்தானி. கொரோனா காலங்களில் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே அடைந்து எந்த வேலைக்கும் வெளியில் செல்லாமல் இருந்தார்கள். அவர்களுக்காகவே இருந்த ஒரே ஒரு பொழுதுபோக்காக செல்போன் இருந்தது. இந்த செல்போன்களில் கேம்ஸ் விளையாடுவது, facebook, டிக் டாக் மற்றும் youtube போன்ற இணையதளங்களை பார்த்துக் கொண்டு இருப்பது போன்ற செயல்களில் இருந்தனர். அதிலும் சிலர் அவர்களாகவே ஒரு சேனலை ஆரம்பித்து அதில் அவர்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒன்றை செய்து அவர்களின் திறமைகளை வெளிக்காட்டி வந்தார்கள். சிலர் சமையல் குறிப்பு போன்றவற்றை தினமும் பதிவிடுவது, இன்னும் சிலர் காமெடி வீடியோக்கள், நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற அவர்களுக்கு தெரிந்த பல திறமைகளை வீடியோவாக எடுத்து அதனை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
அதைப் போன்று இந்த பிரியங்கா மஸ்தானையும் கொரோனா நேரத்தில் சாதாரணமாக ஒரு நைட்டி போன்ற உடைகளை அடைந்து அதில் ஒரு கானா பாடலுக்கு ஆக்டிங் செய்து அதனை தனது இணையதள பக்கத்து பதிவிட்டேன் அது மிகவும் பெரிய அளவில் டிரெண்டாகவே மாறிவிட்டது என்று கூறுகிறார். எப்படி அந்த டிக் டாக் வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்சுகளில் இருக்கின்றாரோ அதே போல தான் தனது அன்றாட வாழ்விலும் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பாராக மிகவும் ஜாலியாக இருக்கும் கேரக்டர் என்று கூறுகிறார். முதலில் டிக் டாக்கில் தனது வீடியோக்களை பதிவிட்டு வந்த பிரியங்கா மஸ்தானி பிறகு டிக் டேக் பேங்க் செய்ததற்கு அடுத்து இன்ஸ்டாகிராம் என்ற செயலியில் தனது அக்கவுண்ட்டை ஆரம்பித்து அதில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு ரசிகர்கள் பெருமளவில் அதிகரிக்கவே, அதன் பின் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதிலும் பல வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்த இவர் சென்னையில் நடந்த மிஸ்டர் தமிழ்நாடு என்னும் போட்டியில் கலந்து தங்க பதக்கத்தை வென்றார்.
அதிலிருந்தே இவர் இன்னும் கொஞ்சம் பிரபலமாகவே மாறி அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார் என்று கூறலாம். இந்த நிலையில் இவர் ஒரு தனியார் சேனலில் கொடுத்த பேட்டியில் பேசிக்கொண்டு உள்ளபோது திடீரென்று ஒரு 25 கிலோ எடை உடைய ஒரு வாட்டர் கேன்ஐ கொடுத்து தூக்க சொல்லியுள்ளனர். ஆனால் பிரியங்கா மஸ்தானியால் அதனை தூக்க முடியவில்லை. ஆனால் இந்தப் பேட்டி எடுக்கும் ஆங்கர் அந்த 25 கிலோ எடை உடைய வாட்டர் கேனை சுலபமாக தூக்கிவிட்டார். இதனை பார்க்கும்போது மிகவும் காமெடியாகவே இருந்தது. மேலும் பிரியங்கா மஸ்தானி யாராவது தூக்கி கொடுத்தால் தூக்கி விடுவேன் என்று கூறியிருப்பது பார்ப்பதற்கே சிரிப்பூட்டும் வகையில் உள்ளது. அதோடு இதற்கு சமீபத்தில் கொஞ்ச நாட்களாகவே இணையத்தில் பாடி பில்டர் என்னும் பெயரை சொல்லிக்கொண்டு சுற்றிக்கொண்டு வந்த இவர் ஒரு வாட்டர் கேனை கூட தூக்க முடியவில்லை என்று இணையத்தில் பல கேளிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் கெத்தா இருந்த பொண்ணு கூட்டிட்டு வந்து இப்படி ஊமை குத்தா குத்திட்டீங்களே என்றும் 10 லிட்டர் கேனையாவது தூக்கிக் காட்டுமா என்றும் பல கமட்டுகள் எழுந்து கொண்டே வருகிறது. மேலும் கெத்தாக இருந்த பெண்ணை கூட்டி வைத்து கலாய்த்து விட்டார்கள் என்று பல நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.