24 special

நேற்று வாய் கிழிய பேசிய ரகுமானுக்கு இன்று விழுந்த ஆப்பு இதெல்லாம் நமக்குத் தேவையா ஏஆர் ரஹ்மான்

MKSTALIN ,ARRAHMAN
MKSTALIN ,ARRAHMAN

எனக்கு வாய்ப்புகள் இல்லை… காரணம் சமூகம்” என்று கூறியுள்ளார் ஆஸ்கர் நாயகன்  ஏஆர் ரஹ்மான் இது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது . மக்களிடம்  உண்மையைச் சொல்லுவது தான் கஷ்டம். கடந்த எட்டு ஆண்டுகளில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை மக்கள் மனதில் எத்தனை முறை ஒலித்தது? திரையரங்கில் கை தட்ட வைத்தது எத்தனை பாடல்கள்? இளைஞர்களின் காதில் எத்தனை முறை கேட்க வைத்தது ? இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், தோல்விக்குக் காரணமாக ‘சமூகம்’, ‘லாபி’, ‘பாகுபாடு’ என்று குற்றம் சாட்டுவது, சுய விமர்சனத்திலிருந்து தப்பிக்க முயலும் வசனமாகவே தெரிகிறது.


பாலிவுட்டு சமூக சார்புடையதா என்றால், இன்று வட இந்தியாவில் உச்சத்தில் இருப்பவர்கள் யார் என்று பாருங்கள். அமித் திரிவேதி குஜராத்தி;. தமன் தெலுங்கு; இன்று இந்தி சினிமாவை குலுக்குகிறார். அனிருத் தமிழன்; பாலிவுட்டு கதவுகள் தானாக திறந்தன. இவர்களுக்கு எந்த சமூக தடையும் இல்லை. ஏன் என்றால் அவர்களின் இசை ‘இன்றைய மக்களின் துடிப்போடு ஒத்திசைகிறது. இங்கே தீர்ப்பு சொல்லுவது சமூகம் அல்ல மக்கள்.

அப்படியானால் இன்னொரு கேள்வி. தமிழில் ரஹ்மானுக்கு கடந்த ஆண்டுகளில் ஏன் பெரிய வாய்ப்புகள் இல்லை? இங்கே பாலிவுட் இல்லை, வடஇந்திய லாபி இல்லை, மொழி பாகுபாடு இல்லை. முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்கள் தான் தீர்ப்பு சொல்கிறார்கள். அங்கும் அவரது இசை பின்னடைவு கண்டது என்றால், பிரச்சனை வெளியே இல்லை; உள்ளே தான் இருக்கிறது.

“எனக்கு வாய்ப்புகள் இல்லை…காரணம் சமூகம்” இந்த ஒரு வரியில் தான் இன்று முழுக் கதை அடங்கி இருக்கிறது. எட்டு ஆண்டுகளாக பாலிவுட்டில் வாய்ப்பு இல்லை என்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். சரி. அப்படியானால் தமிழில் ஏன் இல்லை? இங்கே பாலிவுட் லாபி கிடையாது, வடஇந்திய ஆதிக்கம் கிடையாது, மொழி பாகுபாடும் கிடையாது. இங்கே தீர்ப்பு சொல்வது ஒரே ஆள் தமிழ் மக்கள். அங்கும் இசை பேசவில்லை என்றால், பிரச்சனை சமூகத்தில் இல்லை; இசையில்தான்.

தோல்வி வந்தால் முதலில் செய்ய வேண்டியது சுயபரிசோதனை செய்ய வேண்டும். அதை செய்யாமல்  மதம் என கூறி திசை திருப்படுகிறது.

இந்த அரசியல். திமுக மேடைகளில் பல ஆண்டுகளாக ஒலித்து வருகிறது. நிர்வாகத் தோல்விகள், ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களின் கோபம்—இவற்றிலிருந்து கவனம் திருப்ப, “மத அரசியல்” என திசை திருப்பி வருகிறார்கள். இப்போது அதே திமுக அரசியலை, திமுகவுக்கு ஆதரவாக பேசும்ஏ.ஆர். ரகுமான்  வெளிப்படையாக கையில் எடுத்திருக்கிறார். 

தேசிய சினிமா இன்று எல்லைகளை உடைத்துவிட்டது. இந்தி, தமிழ், தெலுங்கு என்ற சுவருகள் உடைந்து, ‘பான் இந்தியா’ என்ற ஒரே சந்தை உருவாகி விட்டது. இந்தச் சந்தையில் ஒரே ஒரு விதி தான். வேலை பேச வேண்டும்; வார்த்தை பேசக் கூடாது. ஹிட் இசைக்கு சாதி இல்லை, மதம் இல்லை, மாநிலம் இல்லை. 

பாலிவுட்டை “சமூக சார்புடையது” என்று சொல்லுவது ஆபத்தானது. அது ஆயிரக்கணக்கான கலைஞர்களின் உழைப்பை அவமதிப்பது. இந்திய சினிமாவின் ஒருமைப்பாட்டை சந்தேகப்படுத்துவது. தேசிய கலை மேடையில் தேவையற்ற பிளவுகளை விதைப்பது. ஒரு காலத்தில் இந்தியாவின் பெருமையாக கொண்டாடப்பட்ட கலைஞர், இன்று தனது சரிவுக்குக் காரணமாக சமூகத்தை குற்றம் சாட்டுவது, அவரது உயரத்திற்கே பொருந்தாததாகவே தெரிகிறது.திறமை இருந்தால் வாய்ப்பு தேடி வரும். இல்லையெனில், ஆஸ்கார் பதக்கம் கூட பாதுகாப்பாக இருக்காது.