24 special

ஐபிஎல் போட்டியில் நடந்த சூழ்ச்சமம்.. ராஜஸ்தான் அணி தோல்விக்கு காரணம் நடுவார்களா..?

RR vs DC
RR vs DC

நடப்பு ஐபிஎல் சீசனின் 56-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு காரணம் சஞ்சு சாம்சன் அவுட் ஆனதே காரணம் என கூறுகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.


ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை சூதாட்டம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பிக்சிங் செய்து விளையாடுவது தொடர்பான செய்திகள் வெளியானது இதனால் ஒரு சில அணிகள் ஐபிஎல் போட்டிகளில் இரண்டு ஆண்டுக்கு பேன் செய்த சம்பவம் எல்லாம் அரங்கேறியது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் அனைத்து போட்டியிலும் பிக்சிங் இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறினார்கள் அப்படி தான் இந்த சீசனில் நேற்றைய போட்டியில் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. 

நேற்று டெல்லியில், டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் அணி மோதியது இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. 222 என்ற கடின இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆடியது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் ஆடி 45 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து இருந்தார். அதிரடியாக ஆடி டெல்லி அணிக்கு ஆட்டம் காண்பித்தார் சஞ்சு சாம்சன்.

தொடர்ந்து ஆடி வந்த சாம்சன் 16வது ஓவரின் நான்காவது பந்தை சஞ்சு சாம்சன் சிக்ஸ் அடிக்க முயன்றார். அந்த பந்து பவுண்டரி எல்லையில் நின்றிருந்த ஷாய் ஹோப் கைகளுக்கு சென்றது. பந்தை கேட்ச் பிடித்த ஷாய் ஹோப் நிலை தடுமாறினார். பவுண்டரி எல்லையை தன் கால்கள் தொடாதவாறு ஒவ்வொரு அடியாக நகர்ந்தார். அப்போது அவரது ஷூவின் முனை பவுண்டரி எல்லையை லேசாக உரசியது. எனினும் அவர் சமாளித்து கேட்ச் பிடித்ததாகவே நினைத்தார். அதை சரி பார்க்க களத்தில் இருந்து அம்பயர், மூன்றாவது அம்பையரிடம் ரிவ்யூ பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். மூன்றாவது அம்பயர் ரீப்ளே செய்து பார்க்கும் போது ஷாய் ஹோப்பின் ஷூ பவுண்டரிக் கோட்டில் லேசாக உரசியது தெரிந்தது. அந்த ரீப்ளே காட்சியை தெளிவாக பார்க்காமல், ஒரே ஒருமுறை மட்டும் பார்த்த மூன்றாவது அம்பியார் அவுட் என கொடுத்தார்.

ஆனாலும், "இது அவுட்டே இல்லை" என களத்தில் இருந்த அம்பயர்களிடம் முறையிட்டார். இதை மீண்டும் ரிவ்யூ செய்ய முடியுமா எனவும் கேட்டார். ஆனால் அதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதால் அவருக்கு அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டது. இதை எடுத்து பெரும் ஏமாற்றத்துடன் 86 ரன்கள் எடுத்து நிலையில் சஞ்சு சாம்சன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இதனால் நேற்று ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. 

கிரிக்கெட் போட்டியில் எப்போதும் 360 வடிவத்தில் அனைத்து அவுட்டுகளையும் காட்டும் நடுவர்கள் நேற்று நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் மட்டும் ஏன் ஒரு பக்கம் காட்டியது. பவுண்டரி லைன் முன் பக்கம் ஏன் காட்டவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியது, இதனால் டெல்லி அணிக்கு சாதகமான நிலையில் நடுவர்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. உங்களுக்கு அந்த போட்டியில் நடந்தது அவுட் ஆ அல்லது சிக்சா என்பது குறித்து கருத்துக்களை கமெண்டில் பதிவிடவும்.