Tamilnadu

நிலத்தின் உரிமையாளரை கண்டுபிடிக்க வேண்டுமா???நியூ ட்ரிக்ஸ்!!!

Land
Land

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் பெருமளவில் ரீல்ஸ் போன்றவற்றை செய்து பொழுதுபோக்கும் பலர்தான் தற்போது இருந்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர்தான் சமூகத்திற்கு கருத்துக்களையும், பொதுவான கருத்துக்களையும், தேவைப்படும் விஷயங்களையும் மேலும் யாருக்கும் தெரியாத பல நல்ல விதமான ஐடியாக்களையும் கூறி வருகின்றனர். அதில் தற்போது கூகுள் மேப்பை பயன்படுத்தி நிலத்தின் உரிமையாளரை கண்டுபிடிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது!! பொதுவாக கூகுள் மேப் என்றாலே நாம் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால்!!! ஏதாவது ஒரு இடம் தெரியவில்லை என்றாலோ அந்த இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றாலோ அல்லது நாம் இருக்கும் இடத்திற்கு மற்றவர்களுக்கு சரியான வழியினை காட்ட வேண்டும் என்றாலோ இந்த கூகுள் மேப்பினை பயன்படுத்தி நம்மால் ஈசியாக அந்த இடத்திற்கு செல்லவோ அல்லது மற்றவர்களை வர வைக்கவும் முடிகிறது.


ஆனால் தற்போது கூகுள் மேப் என்பது இதற்கு மட்டும் பயன்படுத்தப்படாமல் நமக்கு ஏதாவது ஒரு நிலத்தின் உரிமையாளர் பெயரோ அல்லது சர்வே என்னையோ அல்லது நிலத்தின் உரிமையாளரையோ  கண்டுபிடிக்க வேண்டும் என்றாலும் இந்த கூகுள் மேப்பிலே பயன்படுத்தி கண்டுபிடிக்க தற்பொழுது ஒரு வீடியோவில் ஒருவர் கூறி வருகிறார்!! நிலத்தின் உரிமையாளர் யார் என்று அறிய வேண்டும் என்றால் இந்த நிலத்திற்குரிய சர்வே என்னை அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. முதலில் எந்த நிலத்தின் விவரங்கள் தேவையோ அந்த இடத்திற்கு சென்று நம் மொபைலில் உள்ள கூகுள் மேப்பினை திறந்து அதில் சாட்டிலைட் வியூவை ஆன் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் இருக்கும் இடத்தினை ஜூம் செய்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக்கொண்டு அடுத்ததாக கூகுளில் சென்று tngis tnega village dashboard என்பதை சேர்ச் செய்து அதில் வரும் முதல் லிங்கினை கிளிக் செய்யவும். அதன் பிறகு தமிழ்நாடு அரசு நடத்தும் வெப்சைட் ஒன்று ஓப்பன் ஆகும்.

அதில் எந்த நிலத்தில் ஓனரினை தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த குறிப்பிட்ட இடம் உள்ள மாவட்டத்தினை செலக்ட் செய்ய வேண்டும். அதன் பிறகு தாலுகா, வில்லேஜ் போன்றவற்றை செலக்ட் செய்து கீழே உள்ள google மேப்பில் நாம் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட வில்லேஜ் உனை செய்து பார்த்தால் அதன் சர்வே எண் கிடைத்துவிடும். அதன் பிறகு ஏற்கனவே google மேப்பில் எடுத்து வைத்த ஸ்கிரீன்ஷாட்டினை எடுத்துக் கொண்டு இந்த வெப்சைட்டில் தெரியும் கூகுள் மேப்வுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதனை பார்த்து அந்த இடத்தில் சரியான சர்வே எண் இணை பொறுத்துக் கொள்ள வேண்டும். அப்போது அந்த இடத்தில் சரியான சர்வே எண்ணை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

அதன் பிறகு eservices tn இன்று வெப்சைட்டினை search செய்து அதில் வரும் முதல் லிங்கில் கிளிக் செய்யவும். இதுவும் தமிழ்நாடு அரசு நடக்கும் ஒரு வெப்சைட் தான். பட்டா சிட்டா எண்களை பார்வையிட என்பதை கிளிக் செய்து அதில் மாவட்டம், வட்டம் மற்றும் கிராமம் போன்றவற்றை செலக்ட் செய்து புல எண் என்பதை செலக்ட் செய்யவும். கீழே புல எண் என்ற இடத்தில் ஏற்கனவே குறித்து வைத்த சர்வே எண் பதிவிட்டு கீழே உள்ள கேப்சாவை சரியாக கொடுத்து சமர்ப்பி என்பதை கொடுக்க வேண்டும். தற்போது அந்த குறிப்பிட்ட இடத்தின் ஓனர் மற்றும் அவருக்கு எவ்வளவு இடம் உள்ளது என்பது வந்துவிடும். ஒருவேளை அந்த இடம் அரசு நிலமாக இருந்தால் திஸ் இஸ் கவர்மெண்ட் லேண்ட் என்று வந்துவிடும். இது போன்றவற்றை பயன்படுத்தி ஈசியாக நிலத்தின் உரிமையாளரை அறிய முடியும் என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.