24 special

சிறுமிக்கு நடந்த கொடூ*ம் ...தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அடுத்த சம்ப*ம்..! இதெல்லாம் ஒரு ஆட்சி...! அமைச்சர் மா.சுவுக்கு ஆப்பு!

MKSTALIN,MASUBRAMANIAN
MKSTALIN,MASUBRAMANIAN

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என தற்பெருமை பேசியும் விளம்பரம் செய்தும் மக்களை ஏமாற்றி வருகிறது திராவிட மாடல் ஆட்சி குறிப்பாக தமிழகம் முழுவதும் கொலை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திருவள்ளூரில் 10 வயது சிறுமி முதல் அண்ணா பல்கலை மாணவி வரை நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போது இந்த விளம்பர ஆட்சி வீட்டிற்கு செல்லும் என மக்களே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக பெண்கள் திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப தயாராகி விட்டார்கள். 


இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சி, பொய்கைகுடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டின் உட்புற சுவர் இடிந்து விழுந்ததில், விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ஒருவர் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 வீட்டின் உட்புறம் நடுவில் இருந்த சுமார் 7 அடி உயரமுள்ள ஒரு சுவர் இடிந்து சிறுமி சஹானாஸ்ரீ மீது விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியுள்ளார்.இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாகச் சுவருக்கு அடியில் சிக்கிய குழந்தையை மீட்டு, அவசர சிகிச்சைக்காகக் காளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. அங்கிருந்த செவிலியர்கள், சிறுமியை உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு நீண்ட நேரம் தாமதமானதாக ஆகியுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் சிறுமி சஹானாஸ்ரீ பரிதாபமாக காளி ஆரம்ப சுகாதார நிலையத்திலோயே பரிதாபமாக உயிரிழந்தார். 

 காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை குறித்தும் மருத்துவர்கள் நியமிக்க கோரி அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த இடம் அப்பகுதி மக்கள் கடந்த ஜூலை நான்காம் தேதி மனு அளிக்க வந்தனர். ஆனால் அவர்களின் மனுவை பெறாமல் அவர்களின் கோரிக்கைகளையும் செவி  கொடுத்து கேட்காமல், எதுவாக இருந்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கேளுங்கள் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சொல்லி அவர்களின் கோரிக்கையை புறக்கணித்த நிலையில் மருத்துவர் இல்லாமல் சிறுமி உயிர் வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிட்ட தக்கது. 

நடப்பாண்டு ஆரம்பத்தில், தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,467 மருத்துவர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தோம். அதன் பின்னர், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டதாக திமுக அரசு செய்திகள் வெளியிட்டது. ஆனால், இன்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் பற்றாக்குறை காரணமாக மக்கள் இன்னலுக்கு உள்ளாகிறார்கள். உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. 

கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்தக் காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் இருந்ததாகவும், தற்போது ஒரு ஆம்புலன்ஸ் கூட இல்லை என்றும், நிரந்தர மருத்துவர்களும் இல்லை என்றும் குற்றம் சாட்டி காளி ஊராட்சி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மக்களின் அடிப்படை தேவைகளுக்குக் கூட போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளியுள்ளது இந்த ஊழல் திமுக அரசு. விளம்பர அரசின் செயலற்றத் தன்மையால் பறிப்போன உயிர்களுக்கு இந்த திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?