Cinema

விஜய் படத்துக்கு எதிர்ப்பு மேல் எதிர்ப்பு....இப்படி கேப்பு விடாம அடிச்சா எப்படி?!

vijaiy
vijaiy

தளபதி விஜய் நடித்து வரும் 19ம் தேதி வெளியாகவுள்ள படம் லியோ, ஜூன் மாதம் 22ம் தேதி லியோ படத்தின் முதல் பாடல் ரிலீசானது. அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக ரீதியாக சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. அதாவது பாடல் வழிகளில்  மில்லி உள்ளே போனா கில்லி வெளியே வருவான் என்ற வரியும் மதுப்பழக்கத்தை ஊக்கப்படுத்துவது போல் இருப்பதாகவும், இதனை முன்னணி நடிகர் சொல்வது ஏற்க முடியாது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் படக்குழு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.


தொடர்ந்து படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா இல்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்த நிலையில், சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு நேற்று முன்தினம் லியோ படத்தின் ட்ரைலரை வெளியிட்டு திருவிழா போல கொண்டாடினர். குறிப்பாக அனைவரது சமூக தளத்திலும் ஸ்டேட்டஸ்- ஆக பதிவிட்டு படத்தின் எதிர்பார்ப்புகளை தெரிவித்தனர். அந்த நிலையில் ட்ரைலரில் விறுவிறுப்பான காட்சிகள் அமைத்திருந்தது லோகேஷ் படத்தின் தனித்தன்மையை காட்டியிருந்தது. 

சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ட்ரைலர் வெளியிடப்பட்டது.  அங்கு ரசிகர்கள் அலைகடலென திரண்டு வந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் ரசிகர்கள் திரையரங்கின் அமரும் சீட்டுகளை சேதப்படுத்தியதும் சமூக தளத்தில் வைரலானது. ஆனால் இதுவரை திரயரங்கில் இருந்து எந்த ஒரு புகாரும் காவல் நிலையத்தில் கொடுக்கப்படவிலை. சேதப்படுத்தியதற்கு சில விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் இது முழுக்க முழுக்க லியோ படத்திற்கு தான் பாதிப்பு ஏற்படுத்தும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ட்ரைலரில் விஜய் பேசிய கெட்டவார்த்தைக்கு பல தரப்பில் இருந்து விமர்சனம் எழுந்தன. முன்னணி நடிகர் இப்படி பேசுவது சரியல்ல மேலும், பெண்களை இழிவு படுத்தும் விவாதமாக விஜய் தொடர்ந்து செயல்படுவது எந்த விதத்திலும் நியாயமல்ல. என விமர்சனம் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக அரசியல் வரும் நடிகர் விஜய் இப்படியான பேச்சுக்கள் பேசுவது விமர்சிக்கத்தக்கது என்று ஒரு பக்கம் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிறு குழந்தை முதல்  இளைஞர்கள் வரை அனைவரும் விஜய் மீது அன்பு கொண்டுள்ளனர். இவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் விஜய் அவரது படத்தில் கெட்டவார்த்தை பேசுவது கண்டிக்கத்தக்கது என விமர்சனம் அதிகரித்துள்ளது. இது வரை விஜயும், படக்குழுவினரும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில் லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்படுள்ளது. அந்த புகாரில்,  நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் லியோ இந்த படத்தின் ட்ரைலர் 05ம் தேதி வெளியானது. லியோ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்க வேண்டும், மேலும் "நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும்" என்றும் டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  இந்த புகார் மூலம் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்படுமா அல்லது காலை நேர சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா? குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. 

முன்னதாக 9 மணி காட்சிகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள், ஆனால், இப்போது 9 மணி காட்சிக்கும் அரசு அனுமதி கொடுக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் முதல் காட்சி 10 மணிக்குதான் வெளியாகவுள்ளது. ஏற்கனவே லியோ ஆடியோ லான்ச் நடைபெறவில்லை, இப்போது 9 மணி காட்சிக்கும் அனுமதி இல்லை என்பதால் விஜய் ரசிகர்கள் பலரும் அப்செட் ஆகியுள்ளனர்.