
இந்தியா அமைதியாக இருக்கிறது என்பதால் அது எதையும் பார்க்கவில்லை என்று நினைப்பது மிகப் பெரிய தவறு. அமைதியை பலவீனமாக எண்ணிய நாடுகளுக்காக வரலாற்றில் தனி அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. இன்று வங்கதேசத்தில் உருவாகி வரும் அரசியல் காட்சிகள், இந்தியாவுக்கு அந்த வரலாற்றை மீண்டும் நினைவூட்ட வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளன. டாக்காவின் சில பகுதிகளில் பாலஸ்தீனமும் பாகிஸ்தானும் சேர்ந்த கொடிகள் ஒரே நேரத்தில் அசைக்கப்படுவதும், இந்திய காஷ்மீரை குறிவைத்து முழக்கங்கள் எழுப்பப்படுவதும், இது தற்செயலான போராட்டம் அல்ல; திட்டமிட்ட அரசியல் சவால் என்பதையே வெளிப்படுத்துகிறது.
இந்த நிலையில், இந்திய அரசியலில் மோடியின் கடும் விமர்சகராக அறியப்படும் ஒரு தலைவர், தேசிய பாதுகாப்பு என்ற இடத்தில் அரசியல் கோடுகளை கடந்து பேசத் தொடங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள், இதுவரை இல்லாத தைரியத்துடன் பேசுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நேரடியாக குறிவைக்கும் கோஷங்கள், சமூக ஊடகங்களில் மட்டும் அல்ல, தெருக்களிலும் ஒலிக்கின்றன.
ஆனால் அந்த கணக்கில் ஒரு விஷயம் விடுபட்டுள்ளது. இந்தியா இன்று எதிர்வினை செய்யும் நாடு அல்ல. அது முன்னமே திட்டமிடும் சக்தி வாய்ந்த நாடு . எல்லையில் துப்பாக்கி சத்தம் இல்லாமலேயே, அரசியல், தூதரகம், பொருளாதாரம், மென்மையான சக்தி என பல அடுக்குகளில் அழுத்தம் கொடுக்க தெரிந்த நாடு. அந்த பவர் வெளிப்பட்டால், வங்கதேச எல்லைகள் வரைபடத்தில் மட்டுமல்ல, அரசியல் நினைவுகளிலும் மறுபடியும் வரையப்படும்.இந்த விவாதத்தின் மையமாக இப்போது சிட்டகாங் மலைப்பகுதி மாறியுள்ளது. இந்தியாவின் திரிபுரா, மிசோரம் மாநிலங்களுடன் ஒட்டிய இந்த பகுதி, 1947ல் நடந்த ஒரு மறைக்கப்பட்ட வரலாற்றுப் பிழையின் சாட்சியாக உள்ளது. அப்போது பல பழங்குடி சமூகங்கள் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி, இந்தியாவுடன் இணைவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தின. ஆனால் அப்போது இருந்த அரசியல் வாதிகள் அவர்களை ஏற்க மறுத்துவிட்டார்கள்.
இந்த மறைக்கப்பட்ட வரலாறையே இன்று மீண்டும் மேசையில் வைத்துள்ளார் பிரத்யோத் மாணிக்கா தேவ்வர்மா. இன்றும் அந்த மலைப்பகுதியில் வங்கதேச அரசின் கொள்கைகளால் அதிருப்தியடைந்த பழங்குடி சமூகங்கள் வாழ்கின்றன. புத்த மடாலயங்கள், இந்து கோவில்கள் மீது தாக்குதல், கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. அதனால் தான் சிட்டகாங் இன்னும் இந்தியாவை ஒரு நம்பிக்கையாக பார்க்கிறது என்ற வாதம், டாக்காவை அதிகமாக பதற வைத்துள்ளது. இந்தியாஒரு சிறிய ஆதரவு அளித்தால், வங்கதேசத்தின் முக்கிய துறைமுக அரசியல் சமநிலை
குலையும் என்ற கணிப்புகள் இப்போது திறந்தவெளியில் பேசப்படுகின்றன.
மேலும் இந்திய மருத்துவமனைகளில்ஆயிரக்கணக்கான வங்கதேச நோயாளிகளும், சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரிசிக்காக இந்தியாவிடம் கெஞ்ச ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய பல்கலைக்கழகங்களில் வங்கதேச மாணவர்கள் கல்வி கற்றும் வருகிறார்கள்,வங்கதேசத்தின் மின் தேவை அதானியை நம்பி உள்ளது. இவ்வளவு செய்தும் இதற்குப் பதிலாக இந்தியாவுக்கு வங்கதேசம் செய்வது என்ன? மதத்தின் அடிப்படையில் தீவிரவாதம் தான்.. எல்லாம் ஒரு அளவுக்குத்தான் என இந்தியா பொறுத்து வருகிறது.
மேலும் வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்தியாவுக்கு விரோதமான அரசியல் மாற்றம் ஏற்பட்டால், அதன் விளைவுகள் வங்கதேச எல்லைக்குள் மட்டும் முடிவடையாது. வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் கிளர்ச்சிகள் தலைதூக்கும் அபாயம், ஆயுத மற்றும் போதைப் பொருள் கடத்தல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இன்னும் ஓரிரு வாரங்களில் முக்கிய முடிவை இந்திய எடுக்க உள்ளது. இது நாளைய அமைதியையும் பாதுகாப்பையும் தீர்மானிக்கும். இனியும் இந்தியா தாமதிக்க வாய்ப்புகள் இல்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது,
