24 special

ஆபரேஷன் தாமரை.. பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள்.. கேரளாவை புரட்டி போட்ட சம்பவம்

PMMODI,RAHULGANDHI
PMMODI,RAHULGANDHI

இன்னும் சில மாதங்களில் கேரளா மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயராகி வருகிறார்கள். குறிப்பாக பாஜக இந்த தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தை குறிவைத்து வேலைகளை செய்து வருகிறது. அதற்காக கேரளாவை விட்டு விட வில்லை. அங்கு தான் சத்தமில்லாமல் சம்பவம் செய்து வருகிறது. ஏனென்றால் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கேரளாவின் தலைநகரை தட்டி தூக்கியது பாஜக. இது கேரள  அரசியலில்புது புயலை கிளப்பியது. இதற்கிடையில் மற்றொரு சம்பவமாக காங்கிரஸ் வார்டு  இருந்த உறுப்பினர்கள், பாஜகவில் இணைந்து மட்டத்தூர் பஞ்சாயத்தை பாஜக கைப்பற்றி உள்ளது. இது கேரள மாநில அரசியல் களத்தில் புதுமையான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தில் கடந்த டிசம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியானது.  காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.ஆளும் இடதுசாரி கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது. அதே நேரத்தில், திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியத இது கேரளாவை புரட்டி போட்டது என்றே சொல்லலாம், 

அதுமட்டுமில்லாமல் மாநிலம் முழுவதும் பாஜக வெற்றியை பதித்தது.இது கம்யூனிஸ்ட்கள்,மற்றும் காங்கிரசுக்கு அதிர்ச்சியாக அமைந்தது, இதற்கிடையே தற்போது கேரளாவில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மட்டத்தூர் பகுதியில் நடந்த சம்பவம் கேரள அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூர் மாவட்டம் மண்டத்தூர் பகுதியில் நடந்த மட்டத்தூர் பஞ்சாயத் தேர்தலில் 

இடதுசாரி உறுப்பினர்கள் – 10 இடங்களிலும்  காங்கிரஸ் – 8 இடங்களிலும்  பாஜக  – 4 இடங்களிலும் வெற்றி பெற்றார்கள் மேலும் சுயேச்சை உறுப்பினர்கள் – 2 பேர் வெற்றிஅடைந்தார்கள் இந்த நிலையில் மட்டத்தூர் தலைவரை தேர்ந்தெடுக்கும்போது, காங்கிரஸ் வெற்றி பெற்ற 8 உறுப்பினர்கள் பாஜகவுடன் இணைந்தனர். இதன் மூலம் மட்டத்தூர் பஞ்சாயத்து தலைவராக பாஜகவின் சார்பில் சுயேச்சை உறுப்பினர் டெசி ஜோஸ் கல்லரக்கல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை டெசி ஜோஸ் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது: “மட்டத்தூர் பகுதியில் நீண்டகாலமாக நீடித்து வந்த இடதுசாரி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதே இந்த நடவடிக்கையின் நோக்கம். மக்கள் விருப்பத்தை பிரதிபலிக்கும் விதமாக நாம் செயல்பட்டோம்.”இந்த சம்பவம், கேரளா அரசியலில் அரசியல் வலையமைப்பின் சமநிலையை மாற்றியமைத்துள்ளது. காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது, பஞ்சாயத்து மட்டத்தூரில் மட்டுமல்லாமல், மாநில அரசியலின் சிக்கல்களை மேலும் தீவிரமாக்கும் என்று அரசியல்நிபுணர்கள் கூறுகிறார்கள்.இவ்வாறான மாற்றங்கள், மாநில அரசியலில் எதிர்கால கூட்டணிகள், வலிமை பகிர்வு, மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தில் புதிய தடங்களை உருவாக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலில்பாஜக பிளான் வேறு மாதிரி இருக்கும் என தெரிவித்துள்ளது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களுக்கு  கிலியை கொடுத்துள்ளது.