24 special

நாட்டையே உலுக்கிய வீடியோ.... சினிமாவை மிஞ்சிய காட்சி! ஸ்டாலின் ஆட்சியின் லட்சணம் இதுதான்! உண்மை வெளியானது

MKSTALIN, ANNAMALAI
MKSTALIN, ANNAMALAI

சமீபத்திய ஆண்டுகளில் குற்றங்கள் நடக்கும் விதமே மாறியுள்ளது.ஒரு காலத்தில் குற்றம் செய்து தப்பிக்க முயன்றவர்கள் இருந்தார்கள்.


இப்போது குற்றம் செய்யும் போதே அதை ரீல்ஸாக பதிவு செய்து பெருமை பேசும் தலைமுறை உருவாகியுள்ளது.முதலில் ரீல்ஸ் போட்டுவிட்டு கொலை.

பின்னர் ரீல்ஸ் எடுத்துக்கொண்டே கொலை.இப்போது ரீல்ஸ் எடுக்கவே மனித உயிர் பலியாகும் அளவுக்கு கொடூரம் சாதாரணமாக்கப்பட்டுள்ளது.ரீல்ஸ் கலாச்சாரம் என்ற பெயரில், மனித உயிர் ஒரு “காண்டெண்ட்” ஆக மாறிவிட்டது என்பதே சமீபத்திய சம்பவங்களின் கொடூர உண்மை.

இந்த நிலையில் தான் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகில் ரயில்வே குடியிருப்பு பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டு உடலில் 20 இடங்களில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் வெட்டுக் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த வடமாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர்.விசாரணை மேற்கொண்ட நிலையில் காயம் பட்ட அந்த வாலிபர் 34 வயதுடைய சூரஜ் என்பதும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. ரயிலில் வந்த சூரஜை அதே ரயிலில் வந்த மற்றொரு கும்பலான கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் ரீல்ஸ் மோகத்தில் அவரை வம்பிழுத்து வெட்டியது தெரிய வந்துள்ளது.

கஞ்சா போதையில் இருந்த நந்த கோபால்,  விக்னேஷ்,சந்தோஷ் மற்றும்  திருத்தணி நெமிலி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சந்தோஷ் ஆகிய நான்கு சிறுவர்களும் வடமாநில இளைஞர் சூரஜை ரீல்ஸ் மோகத்தில் கத்தியால் வெட்டி அதனை வீடியோ எடுத்து கஞ்சா போதையில் இதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரல் ஆக்கியுள்ளனர்.ரீல்ஸ் மோகத்திலும் கஞ்சா போதையிலும் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளம் பருவத்தினர், பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி போதையில் இப்படித் தடம் புரள்கிறது. 

இது வெறும் இளைஞர்களின் தவறா? இல்லை இது சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்கத் தவறும் அரசின் முழுமையான தோல்வி.

அதே நேரத்தில், ரவுடியிசம், வன்முறை, கொடூரத்தை ‘மாஸ்’, ‘கெத்து’ என மகிமைப்படுத்தும் சில சினிமா படைப்புகளின்  சமூகப் பொறுப்பற்ற தன்மை.இந்த வன்முறை கும்பல்கள் பல நேரங்களில் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவுடன் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. 

வன்முறைகளை தடுக்க வேண்டிய அரசோ அறவழியில் போராடும் விவசாயிகள் மீது.ஆசிரியர்கள், செவிலியர்கள், கைது செய்யப்படுவது தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்படுவது  பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகளின் போராட்டங்களை ஒடுக்குவதது .சமூக வலைதளங்களில் விமர்சித்தால் அவர்களை கைது செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது.நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிப்பதில்.ஒரு மதத்தை உயர்த்தி, மற்றொரு மதத்தை தாழ்த்தும் அரசியலில் தான் இந்த  திமுக அரசு செயல்பட்டு வருகிறது.  தமிழ்கத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன் முக ஸ்டாலின் அவர்களே?