
நாடு முழுவதும் நக்சல் நடமாட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்கும் இலக்குடன் மத்திய அர உறுதிமொழி அளித்திருந்த நிலையில், அதை தீவிரமாக செயல்படுத்தி வருபவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா . பாதுகாப்பு படைகளை சமாளிக்க முடியாமல், வன்முறையை கைவிட்டு ஆயுதங்களுடன் நக்சல் தலைவர்களும், நக்சல் இயக்கத் தினரும் கூண்டோடு சரண் அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் ஒடிஷாவில் மாவோயிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினர் கணேஷ் உய்கே உட்பட ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம், நக்சல் ஒழிப்பு நடவடிக்கை இறுதிகட்டத்தை எட்டியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
தென் மேற்கில் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் ஒடிஷா எல்லைகளிலும், கிழக்கில் மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்டிலும், வடக்கில் பஞ்சாப், ஹரியானாவிலும் நக்சல் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் நக்சல் அமைப்பின் மத்திய கமிட்டியில், 49 பேர் மத்திய உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் பலர் என்கவுன்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.சிலர் ஆயுதங்களுடன் சரணடைந்து, தேசிய நீரோட்டத்தில் இணைந்து விட்டனர். இதனால், மத்திய கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் எட்டாக குறைந்திருக்கிறது.
தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பான சி.பி.ஐ.,-மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினராக இருந்த பசவராஜ் கடந்த மே மாதம் சத்தீஸ்கரில் கொல்லப்பட்டார். அதேபோல், ஆந்திராவில் நடந்த தேடுதல் வேட்டையில் அமைப்பின் முக்கிய தளபதியான மாத்வி ஹித்மா மற்றும் அவரது மனைவி உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.குறிப்பாக நாடே தீவிரமாக தேடி வரும் மற்றும் ரூ.77 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன், தமது கூட்டாளிகளுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் பாலகாட் பாதுகாப்பு படை முன்பு சரண் அடைந்துள்ளான். சரண் அடைந்துள்ள நக்சல் தலைவன் பெயர் சுரேந்தர் (எ) கபீர். இவனுடன் 10 பேரும் சரண் அடைந்திருக்கின்றனர்.
அதே போல் மாவோயிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினர் கணேஷ் தலைக்கு 1.1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது,.இந்த நிலையில் அவரும் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளான்கணேஷ் உய்கே, தெலுங்கானாவின் புல்லேமாலா கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக பல குற்றச்செயல்கள் புரிந்து தலைமறைவாக வாழ்ந்த இவன் , கொல்லப்பட்டது நக்சல் ஒழிப்பு நடவடிக்கைக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தேடுதல் வேட்டை தொடர்கிறது.
நக்சல் அமைப்பின் உயர்மட்ட தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவதால் சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான நக்சல்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர். இதனால் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எஞ்சியுள்ள சி.பி.ஐ., மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொதுசெயலரான தேவுஜி மற்றும் அவரது ஆதரவாளர்களை பிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமடைந்துள்ளனர். தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் அவர்களை அடையும் தேடுதல் வேட்டை தொடர்கிறது. உடல்நலக் குறைவு காரணமாக தேவுஜி பதுங்கியுள்ளார்; இருப்பினும் பாதுகாப்பு படையினர் விரைவில் அவரை பிடிப்பதில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மாவோயிஸ்ட் தளபதி கணேஷ் என்கவுன்டரில் கொல்லப்பட்டதும், நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய திருப்புமுனையாகும். இதன் மூலம், ஒடிஷா நக்சல்கள் இல்லாத மாநிலமாக மாறும் சூழலை எட்டியுள்ளது. இதற்கு முழு காரணம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் என்கிறார்கள்.
நக்சல் வேட்டை முடிந்ததும் அடுத்த வேட்டை வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கி கொண்டு அரசியல் கட்சி நடத்தும் தலைவர்கள் தான் தேசத்திற்கு எதிராக மதத்தை வைத்து துண்டாட நினைக்கும் அரசியல் கட்சி தலைவர்களை ஒடுக்க ஒரு திட்டம் தீட்டி வருகிறது டெல்லி டீம்..
