திமுகவினர் இடையே சமூக வலைத்தளங்களில் மட்டுமே போட்டி இருப்பதாக பலர் தெரிவித்து வந்த நிலையில் தற்போது களத்திலும் அரசியல் மோதல்கள் அரங்கேறி இருப்பது ஒவ்வொன்றாக தெரியவந்து இருக்கிறது.சென்னையை அடுத்த ஐயப்பன்தாங்கள் பஞ்சாயத்தில் பாஜகவை சேர்ந்த சிவசங்கரி கவுன்சிலராக உள்ளார், இவர் செய்த தரமான சம்பவம் தற்போது வெளிவந்து இருக்கிறது. பஞ்சாயத்து தலைவர் திமுகவை சேர்ந்தவராக இருப்பதால் பஞ்சாயத்து அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி உதயநிதி புகைப்படங்கள் வரை வைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் பிரதமர் மோடியின் படம் இல்லை இந்த சூழலில் தான் பஞ்சாயத்திற்கு 80% நிதி மத்திய அரசிடம் இருந்து வருகிறது ஆனால் பிரதமர் மோடியின் படம் வைக்க கூடாது என சொல்ல நீங்கள் யார் முதல்வர் ஸ்டாலின் படம் இருக்கும் போது பிரதமரின் படம் இருக்க கூடாதா என பிரதமர் மோடியின் புகைப்படத்தை கெத்தாக பஞ்சாயத்து அலுவலகத்தில் மாற்றி இருக்கிறார்.
திமுக வினர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பிரதமர் என்பவர் நாட்டிற்கு பொதுவான நபர் நான் ஒன்றும் பாஜக கட்சி தலைவர் புகைப்படத்தை மாற்றவில்லை நாட்டின் பிரதமர் புகைப்படத்தை மாட்டி இருக்கிறேன் யாராவது பிரதமர் புகைப்படத்தை அகற்றினால் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என பெண் கவுன்சிலர் கொடுத்த எச்சரிக்கையால் அன்றைய நாளில் இருந்து இன்று வரை பிரதமர் மோடியின் புகைப்படத்தை திமுகவினர் தொடங்கி யாரும் அகற்ற தொட்டு கூட பார்க்க முன் வரவில்லையாம்.
சபாஷ் சமூக வலைத்தளத்தில் மட்டுமல்ல களத்திலும் பாஜகவினர் பஞ்சாயத்து மட்டத்தில் வேலை செய்கிறார்கள் என்பதற்கு இது நேரடி எடுத்து காட்டு என 2021 டிசம்பர் மாதம் நடந்த நிகழ்வை வெளி உலகிற்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள் பாஜகவினர்.