செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட மூன்று முக்கிய காரணங்கள் விசாரணையின் போக்கையே மாற்றி இருக்கிறது அதிலும் ஒரு பட்டனை அழுத்தினால் அனைத்து ஆதாரங்களும் அழிந்து விடும் என கூறியதும் மேலும் சர்வதேச பண மோசடி சட்டத்தை செந்தில் பாலாஜி வழக்கில் சுட்டி காட்டியதும் இறுதியாக 40% அடைப்பு அனைவருக்கும் இருக்கும் என துசார் மேத்தா சுட்டி காட்டியதும் செந்தில் பாலாஜி சர்வ தேச டானா எனவும் இப்போது விவாதங்கள் எழுந்து இருக்கின்றன.
நேற்று உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக வாதாடிய அமலாக்கதுறை வக்கீல் துசார் மேத்தா..சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னதாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததால் உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. 2000ம் ஆண்டு தொடக்க காலம் வரை உலகம் முழுக்க பல நாடுகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக சிரமப்பட்டன.இதையடுத்துதான் ஐநாவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவிலும் பிஎம்எல்ஏ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.அதுமட்டுமின்றி ஐநா நாடுகள் ஒன்றாக சேர்ந்து ‘நிதி நடவடிக்கை பணிக்குழு’ என்ற டாஸ்க் போர்ஸ் ஒன்றை கூட உருவாக்கியது.
அதில் 40 விதிகள் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு நாட்டின் சட்டமும் இந்த 40 விதிகளுக்கு கீழ் இருக்கிறதா என்று பார்த்தது. அதை வைத்து உலக நாடுகளை கருப்பு, கிரே, வெள்ளை என்று தரம் பிரித்தது.பாகிஸ்தான் எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் கிரே லிஸ்டில் இருக்கிறது. விரைவில் கருப்பு லிஸ்டிற்கு சென்றுவிடும்.ஆனால் நாம் விதிகளை முறையாக கடைபிடிக்கிறோம். இந்த லிஸ்டில் உள்ள 5 உறுப்பு நாடுகள் நம் விதிகளை கண்காணித்து வருகின்றன. நம்முடைய சட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன.
அதனால் சட்ட ரீதியாக இது போன்ற வழக்குகளில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கிறது என செந்தில் பாலாஜி வழக்கில் சர்வதேச சட்டத்தை சுட்டி காட்டி வாதடினார் துசார் மேத்தா..மேலும் பிஎம்எல்ஏ சட்டத்தின்படி அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்தவும் பரிந்துரை செய்யவும் முழு அதிகாரம் இருக்கிறது. அந்த சோதனையின் போது போதிய ஆதாரங்கள் கிடைத்தால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும், விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணை அதிகரிக்கு முழு அதிகாரம் இருக்கிறது.பிஎல்எம்ஏ சட்டப்பிரிவு 19ன் கீழ் சந்தேகம் அல்லது ஏதேனும் தகவலின் அடிப்படையில் அமலாக்கத் துறையால் கைது செய்ய முடியாது.
ஒரு நபர் பணமோசடி செய்த குற்றவாளி என்று சொல்வதற்கு ஆதாரம் தேவை. சட்டப்பிரிவு 41ஏ-வைக் காட்டிலும் பிஎல்எம்ஏ சட்டப்பிரிவு 19 மிகக் கடுமையானது.பண மோசடி போன்ற குற்றங்களில் குற்றம் செய்தவர் ஒரு பட்டனை க்ளிக் செய்தால் போதும், ஆதாரங்கள் எல்லாம் அழிந்துவிடும். இப்போது நான் நோட்டீஸ் அனுப்புகிறேன் என்றால், அந்த நோட்டீஸ் குற்றம் சாட்டப்பட்டவர் கையில் கிடைத்தவுடன் அவர் ஆதாரங்களை அழித்துவிடுவார்.
அதுபோன்று கைது செய்யப்படுவதற்கான காரணங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றில்லை. கூடிய விரைவில் தெரிவித்தால் போதும் என்று ஏற்கனவே நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் இருக்கின்றன.செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய மூத்த நீதிபதி நிஷா பானு தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் எவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம். ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால் போதுமானது” என குறிப்பிட்ட துசார் மேத்தா
இறுதியாக த“இப்படி கைது நடவடிக்கையின் போது மருத்துவமனைக்குச் சென்று படுத்துக்கொண்டால் எப்படிதான் விசாரணை செய்ய முடியும். சில நேரங்களில் இதுபோன்ற குற்றங்களில் ஒருவருக்கு பங்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அமலாக்கத் துறை விசாரணைக்கு உள்ளாவதை விட அறுவை சிகிச்சை செய்து கொள்வதே எளிது என சிலர் நினைத்திருக்கலாம். பொதுவாக எல்லோரும் டெஸ்ட் எடுத்து பார்த்தால் அனைவரது இதயத்திலும் 40சதவிகிதம் அடைப்பு இருக்கும்” என செந்தில் பாலாஜி செய்த தகிடதத்தோம் நிகழ்வுகளை சுட்டி காட்டினார்.
விரைவில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராகவே தீர்ப்பு வர சட்டத்தில் இடம் இருப்பதாகவும் இன்னும் சொல்ல போனால் நீதி மன்றம் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை கைது செய்தது சரி என தீர்ப்பு வழங்கினால்.மிக பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அடித்து கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.