சமீபத்தில் நடந்த இரண்டு முக்கியமான சம்பவங்கள் ஆளும் திமுகவிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, ஒன்று ஆளுநர் மூலமும் மற்றொன்று உச்சநீதிமன்றம் மூலம் நடந்துள்ளது, இது குறித்து பேசப்படும் தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு தயாராக பாஜக தேசிய தலைமை மாநில தலைமைகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது, மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவிற்கு வெற்றிக்கு வாய்ப்பு உடைய தொகுதிகள் எவை? கூட்டணி சேர்ந்தால் வெற்றி வாய்ப்புடைய தொகுதிகள் எவை என்று தரவுகளை சேகரித்து வைக்கவும் பாஜக தேசிய தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சூழலில் தற்போது அதற்கான முன்னேற்பாடுகளில் பாஜக தலைமை இறங்கியுள்ளதாம், கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும், புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாகவும் பாஜக நிர்வாக மாவட்டங்களை பிரித்து புதிதாக 6 மாவட்டங்களை உருவாக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முடிவு எடுத்து இருக்கிறார்.
இந்த சூழலில் தேசிய தலைமை உத்தரவிற்கு ஏற்ப மாநிலத்தில் பாஜகவிற்கு சாதகமான தொகுதிகளை கண்டறியும் பணி தொடங்கி இருக்கிறது, இது ஒருபுறம் என்றால் சமீபத்தில் ஆளுநர் ஆர். என். ரவி செய்த சம்பவம் சத்தமின்றி ஆளும் அரசிற்கு மிக பெரிய அளவில் பதிலடியாக அமைந்து இருக்கிறது. கடந்த 5-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்து சந்தித்து இருந்தார் ஆளுநர் ரவி.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது இது வ.உ.சி சார்ந்த சமூகத்தினர் இடையே மெல்லிய ஆதரவை உண்டாக்கி இருக்கிறது, ஏன் முதல்வர் ஆளுநர் போல் சிதம்பரம் பிள்ளையின் வரலாற்றை நினைவு கூறும் விதமாக அவரது குடும்பத்தினரை அழைத்து பேசவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்படி ஒரு புறம் ஆளுநர் செக் வைக்கிறார் என்றால் மிக தீவிரமாக ஆளுநர் ரவி தமிழ் கற்று வருகிறாராம், 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு 8 மாதம் முன்பாக சரளமாக தமிழில் பேசவேண்டும் என தீவிரமாக கற்று வருகிறாராம் இங்கு தான் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் சில அரசு அதிகாரிகளுக்கும் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறதாம்.
தமிழ் தெரியாத போதே.. பல்கலைக்கழக திருத்த மசோதா, சிறை கைதிகள் விடுதலை, நீட் தேர்வு என பல வழிகளில் ஆளுநர் குடைச்சல் கொடுக்கிறார், முழுமையாக தமிழை ஆளுநர் கற்றபின் நிச்சயம் நேரடியாக பல விவகாரங்களை தோண்டி எடுப்பார் என்றும் ஆளும் கட்சி அஞ்சுகிறதாம்.
ஆளுநர் மூலம் திமுகவிற்கு ஒருவித பதற்றம் உண்டாகி இருக்கிறது என்றால் உச்ச நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரணை செய்யலாம் என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதோடு நில்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக நீதிபதிகள் கூறினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி புகாரை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதால் மட்டும் குற்றவாளி இல்லை என்று கருதமுடியாது என உச்ச நீதிமன்றம் வெளுத்து எடுத்துள்ளது
இதனால் செந்தில்பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கோட்டையாக மாற்றுவோம் என செந்தில்பாலாஜி கூறி இருந்த நிலையில் அவர் மீதான லஞ்ச வழக்கு விசாரணை வரவுள்ள நிலையில் திமுகவின் கொங்கு மண்டல கனவு என்ன ஆகும் என்ற ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்களாம் உடன்பிறப்புகள்.