Cinema

"இசை அமைப்பாளர்" AR ரஹ்மானின் உண்மை முகம் வெளிவந்தது....! ரசிகர்கள் அதிர்ச்சி!

Ar rahman
Ar rahman

இசைமைப்பாளர் AR.ரஹ்மானுக்கு அனைத்து மதங்களிலும் ரசிகர்கள் உண்டு அவரை மதங்களை கடந்து நேசித்த நபர்களுக்கு மூத்த பத்திரிகையாளர் தெரிவித்த தகவல் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது, குறிப்பாக இந்து மதம் குறித்த பாடல்களை ரஹ்மான் தவிர்ப்பதும் அவரது மனதில் உள்ள மத உணர்வு எப்படி பட்டது என உண்மை முகத்தை உடைத்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் கல்யாண் குமார்.


கல்யாண் குமார் யூடுப் சேனல் ஒன்றில் பேசுகையில், ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர். ரஹ்மான். இப்படம், வெளி வரும் முன்பே, இந்தியா டுடேவில் ரஹ்மானை முதன் முதலில் நான் தான் பேட்டி எடுத்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை அவருக்கும் எனக்கும் நல்ல உறவு உண்டு. ஒருமுறை, சன்.டி.வியின் சார்பாக அவரிடம் பேட்டி ஒன்றினை எடுத்தேன். அதில், ஏ.ஆர்.ஆர் ரஹ்மானின் சிறந்த 10 பாடல்களை சன் டி.வியில் ஒலிபரப்பு செய்ய முடிவு செய்து இருந்தேன்.

நிகழ்ச்சியின், இறுதியாக கே.வி. மகாதேவனின் ஆன்மீக பாடல் ஒலித்து கொண்டு இருக்கும் போதே ஏ.ஆர்.ரஹ்மான் தியாகராஜ பாகதவரின் படத்தின் முன்பு வணக்கம் செலுத்துவது போன்று காட்சி ஒன்றை அமைத்து இருந்தேன்.


இதையடுத்து, அனைத்து எடிட்டிங் வேலையையும் முடித்து விட்டு சன்.டி.வியிடம் அந்த டேப்பை ஒப்படைத்து விட்டேன். இரவு, ஒரு மணி இருக்கும் எனது பேஜரில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஏ.ஆர்.ஆர். அலுவலகத்திற்கு உடனே வருமாறு கூறப்பட்டு இருந்தது.இதையடுத்து, நான் அவரது அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். அப்போது, ஏ.ஆர்.ஆர். தாயாரும் அங்கு இருந்தார்.

அவர், உங்கள் மீது நான் எவ்வளவு மரியாதை வைத்து இருந்தேன். நீங்கள் இப்படி? செய்யலாமா என அவரது தாயார் என்னிடம் கேட்டார். நான் அதிர்ச்சியடைந்து என்னவென்று கேட்டேன். தியாகராஜ பாகவதரை, ஏ.ஆர்.ஆர். வணங்குவது போல காட்சி அமைத்து இருந்தீர்கள் என சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.

இசையமைப்பாளர்களின் முன்னோடியாக இருந்தவர் தியாகராஜ பாகவதர். ஏ.ஆர்.ஆர். அவருக்கு மரியாதை செலுத்துவதாக நினைத்து அந்த காட்சி அமைத்து இருந்தேன். ஆனால், அவரது தாயார் ஹிந்து கடவுளை வணங்குவதாக நினைத்து கொண்டார். இதையடுத்து, சன்.டி.வி ஊடகத்தை தொடர்பு கொண்டு அந்த காட்சியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் அது ஒலிபரப்பு செய்யப்பட்டது.

இதையடுத்து, தசாவதாரம் படத்தில் கிடைத்த கசப்பான அனுபவத்தையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். AR. ரஹ்மான் இத்தனை மத உணர்வு கொண்ட நபரா என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.