கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெய்த மழையானது தீவிரமடைந்திருந்தது அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரை பெய்யாத அளவிற்கு கடந்த 2022 ஜூன் மாதத்தில் பெய்த மழையின் அளவு அதிகரித்து இருந்ததாகவும் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள காரணத்தினால் சென்னையில் மழையின் அளவு அதிகரித்ததாகவும் செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி வரலாறு காணாத அளவிற்கு சென்னை பகுதிகள் முழுவதும் மழை நீரால் தேங்கி இருந்த சம்பவத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வழக்கமாக மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சென்னை முழுவதும் மழை நீர் தேங்காத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் சென்னை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் படி சென்னை மாநகராட்சியால் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதாக செய்திகள் வெளியானது, ஆனால் மழை பொழிந்த பிறகு ஒவ்வொரு தெருக்களிலும் மழை நீர் தேங்கி இருந்தது தமிழக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதிலும் குறிப்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சென்னையில் பலத்த மழை பெய்த சமயம் சென்னை மக்கள் ஒவ்வொருவரும் தனது அன்றாட செயல்களை செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த நிலையில் சென்னை மேயர் பிரியா வெளிநாட்டு பயணங்கள் சென்றது மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் மழை நீர் அனைத்து பகுதிகளிலும் தேங்க கூடாது ஏனென்றால் தேர்தல் வருவதற்கும் இன்னும் சில மாதங்களில் உள்ள காலம் எனவே மழைநீர் தேங்காத வண்ணம் சென்னை முழுவதும் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று தமிழக அரசு தீவிரமாக இறங்கியது.
அதுமட்டுமின்றி இந்த முறை சென்னை மேயர் பிரியாவை முழுமையாக நம்பாமல் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கிய செய்திகளும் வெளியானது. மேலும் பிரியாவிற்கு வேறு எந்த வேலைகளும் கொடுக்கப்படாமல் சென்னை முழுவதும் மழை நீர் தேங்காத பகுதியாக இந்த முறை மாற்ற வேண்டும் என்ற உத்தரவு அறிவாலய தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டதாம், இப்படி கொடுக்கப்பட்ட ஒரு வேலையையும் இந்த முறையும் மேயர் பிரியா செய்யாமல் விட்டுள்ளாராம்.
இதனால் கடந்த 2 தினங்களில் விட்டுவிட்டு பெய்த மழை காரணமாக சென்னையில் ஆலந்தூர், கிண்டி போன்ற சென்னையில் முக்கிய நகரங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் அறிவாலயத்திலிருந்து நேற்று பிரியாவிற்கு செம டோஸ் விடப்பட்டதாம். என்ன வேலை பார்க்கிறீர்கள் தேர்தல் வேறு வரப்போகிறது! என அறிவாலய தலைமை மேயர் பிரியாவிடம் கடிந்து கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி மேயர் பிரியாவிடம் கொடுக்கப்பட்டிருந்த இந்த பொறுப்பு தற்போது கே என் நேருவிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சில அறிவாலயத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டு மொத்தமாக சென்னை பகுதி முழுவதும் இருக்கும் வேலைகள் என்பது மிகவும் அதிக பணம் நிறைந்தது அதற்கு மத்தியில் சென்னை மாநகராட்சியின் மேயர் ஆன பிரியாவிடம் ஒரே ஒரு வகையான மழைநீர் தேங்காத பகுதியாக மாற்றுங்கள் என்ற பணி கொடுக்கப்பட்ட போதிலும் அதையும் அவர் சரியாக செய்யாமல் மக்களை மறுபடியும் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு திண்டாட வைத்தது திமுக தரப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால்தான் தற்பொழுது இந்த பொறுப்பு கே என் நேருவிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீங்கள் அமைச்சர் சொல்வதை கேட்டால் மட்டும்போது என வேறு மேயர் பிரியாவிற்கு கட்டளைகள் பறந்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன