24 special

தன் பாணியில் அரசியலுக்கு வரவிருக்கும் விஜய்க்கு பேராசிரியர் ராம சீனிவாசன் கொடுத்த நச் கமெண்ட்...

rama srinivasan, actor vijay
rama srinivasan, actor vijay

லியோ படத்தின் வெளியீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்னரே தனது மக்கள் இயக்கத்தின் நடவடிக்கைகளை அரசியல் சார்ந்து இருக்குமாறு பார்த்துக் கொண்டார் நடிகர் விஜய், அதனை தொடர்ந்து லியோ படம் வெளியானதும் லியோ படத்தின் வெற்றி விழாவில் அரசியல் வெளியீடு குறித்தும், அரசியல் வருகை குறித்தும் சூசகமாக சில விஷயங்களை கூறினார் விஜய். அதனைத்தொடர்ந்து விஜய்யின் பேச்சு அரசியல் வருகையை சூசகமாக அறிவிக்கிறது! எப்படியும் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார்! விஜய் அரசியலுக்கு வர வேண்டும்! விஜய் அரசியலுக்கு வர தேவையில்லை! என்பது போன்ற பல விமர்சனங்கள் எழுந்தது.


இந்த நிலையில் விஜயின் அரசியல் வருகையை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும் பொழுது 'புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும், புதியவர்கள் அரசியலுக்கு வரும்பொழுது தான் ஒரு சில விளைவுகள் ஏற்படும். புதியவர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்' என விஜய்யின் அரசியல் வருகை குறித்து குறிப்பிட்டார் அண்ணாமலை.இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் பேராசிரியர் ராம.சீனிவாசன் தனது பாணியில் ஒரு கருத்தை விஜய்க்கு கூறியது தற்பொழுது வைரல் ஆகியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய பேராசிரியர் ராம சீனிவாசன் கூறும் பொழுது, 'விஜய் அவர்களின் பேச்சு, விஜய் அவர்களின் நடவடிக்கை, விஜய் அவர்களின் எண்ணங்கள் அத்தனையும் அரசியலுக்கு வருவதைத் தான் குறிக்கின்றன.

அரசியலுக்கு வருவதை நான் தப்பு சொல்லவில்லை, விஜய் அவர் இருக்கும் உயரத்திற்கு என்னிடம் அட்வைஸ் கேட்க வேண்டும் என இல்லை ஆனாலும் என் தனிப்பட்ட நான் கருத்தை கூறுகிறேன். விஜய் அரசியலுக்கு வருவது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம், ஆனால் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் என்ன நடந்தது எனக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எம்ஜிஆர் ஒருவரை தவிர அரசியலில் ஜொலித்தவர் யாரும் கிடையாது என்பதை விஜய் உணர வேண்டும், எம்ஜிஆர் ஒருவர் தான் அரசியலில் ஜொலித்து பின்னர் முதல்வராக சாகும் வரை இருந்தார். அதன் பின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சொல்வார்கள்.

ஆனால் அவர் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி, எம்ஜிஆர் கொண்டு வந்த சின்னத்தை வைத்து தான் அடுத்தபடியாக தனது அரசியல் வாழ்க்கையை பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா.ஆனால் எம்ஜிஆரை தவிர நீங்கள் எந்த நடிகரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் அரசியலில் தோல்வி அடைந்தவர்கள் தான் அவர்கள் சிவாஜி கணேசன் ஆகட்டும், பாக்யராஜ் ஆகட்டும், டி ராஜேந்தர் ஆகட்டும், விஜயகாந்த் ஆகட்டும், சரத்குமார் ஆகட்டும், நெப்போலியன் ஆகட்டும் இன்னும் பலரை குறிப்பிட்டு சொல்ல முடியும் ஏன் தற்பொழுது இருக்கக்கூடிய கமலஹாசன் கூட அரசியலில் அந்த அளவிற்கு ஜொலிக்கவில்லை.

விஜயகாந்த் அரசியலில் ஓரளவுக்கு வளர்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு லெவலுக்கு மேல் அவரால் செல்ல முடியவில்லை அவரது கட்சி இன்று எந்த நிலைமையில் இருக்கிறதை அனைவருக்கும் தெரியும். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என முனைப்பில் இருக்கும் சமயம் அவர் அரசியலில் இதற்கு முன்பு தோற்றவர்களை கருத்தில் கொள்ள வேண்டும். ரஜினி இது போல் தான் அரசியல் வருகையை அவ்வப்போது சூசகமாக அறிவிப்பார் 'நேற்று கூலியாக இருந்தேன்!  என்று நடிகனாக இருக்கிறேன்! நாளைக்கு ஆண்டவன் என்னை எங்கு வைத்திருப்பார்' எனவும் 'நான் எப்பொழுது வருவேன் எப்படி வருவேன் என யாருக்கும் தெரியாது!

ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்' எனக் கூறி தனது ரசிகர்களை அரசியல் மோடிலேயே வைத்திருந்தார். அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு நாள் குறித்தார் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது அவர் அரசியலுக்கு வந்திருந்தால் நாங்கள் வரவேற்றிருப்போம், அதுபோல் விஜய் செய்யக்கூடாது தனது ரசிகர்களை அரசியல் ஆசை காண்பித்து வைப்பது தப்பு அதையும் விஜய் எண்ணிப் பார்க்க வேண்டும் என பேசியது தற்பொழுது வைரலாகியுள்ளது.