24 special

எதிர்கட்சி கூடரத்தில் காலியாகப்போகும்....! அடுத்த கட்சி இதுவா ரைட்டு சோலி முடிஞ்ச்...!

Sarath pawar , nithis kumar
Sarath pawar , nithis kumar

மகராஷ்டிரா மாநிலத்தில் செல்வாக்கு மிகுந்த அரசியல் குடும்பத்தில் இருந்து பிறந்த சரத் பவார் 1999 இல் இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவி அதன் தலைவராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக மகாராஷ்டிரா அரசியலில் பிளவு ஏற்பட்டு சரத் பவார் பெரும் சரிவை சந்தித்தார்.


தற்போது மகாராஷ்டிராவில் பாஜக ஏக்கநாத் ஷிண்டே - சிவனேச கூட்டணியில் ஆட்சி நடந்து கொண்டு வருகிறது, இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இருந்த அஜித் பவார் பாஜக உடன் இணைந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அஜித் பவார் சரத் பவாரின் அண்ணன் மகனாவார், இருப்பினும் உட்கட்சியில் ஏற்பட்ட பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக அஜித் பவார் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம் எல் ஏ மற்றும் தொண்டர்களுடன் ஆளும் கட்சியுடன் இணைந்து பெரும் அதிர்ச்சிகர திருப்பத்தை மகாராஷ்டிரா மாநில அரசியலில் ஏற்படுத்தினார். 

இது அனைத்து மாநிலங்களின் அரசியலிலும் எதிரொலித்து  சர்ச்சையை கிளப்பியது. இதனால் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் அஜித் பவாருக்கே ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதைப் பற்றி சரத் பவாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் அதற்கு அரசியல் இப்படி போன்ற சூழ்நிலைகள் வருவதெல்லாம் சாதாரணமானது இவை அனைத்தையும் கடந்து தான் நான் இந்த நிலையில் இருந்து வருகிறேன் என்று பதிலளித்துள்ளார். 

இப்படி சரத்பவாரின் கட்சி பிளவு பட்டுள்ள நிலையில், தற்போது அடுத்த கட்டமாக அரசியல் மாற்றங்கள் அல்லது அரசியல் பிளவுகள் எங்கு நடக்கப் போகிறது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கும் போது பீகார் என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பீகாரின் முதல்வராக உள்ள நிதிஷ்குமார் தலைமை மீது ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அதிருப்தி கொண்டுள்ள காரணமாக வேறு கட்சிக்கு அவர்கள் மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கட்சிக்குள் நிலவும் கடுமையான அதிருத்தியால் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் வேறு சில கட்சியினருடன் தொடர்பில் இருந்து வருகின்றனர் ஏனென்றால் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை நிதீஷ் குமாரின் வாரிசாக அறிவிக்கப்பட உள்ளத்திற்கு அக்கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் விரும்பாத காரணத்தினாலே இந்த பிளவு ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் நிதிஷ்குமார் இனிமேல் திரும்பி வந்தாலும் நாங்கள் அவரை ஏற்க மாட்டோம் அவர் நம்பிக்கை கூறிய நபர் அல்ல என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்ற அக்கட்சியின் எம்எல்ஏ எம்பிக்கள் கூறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. 

இத்தகவல்கள் சிறிது சிறிதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் காதுகளுக்கு சென்றதால் மகாராஷ்டிரா போலவே தன்னுடைய கட்சி உடைந்து விடுமோ என்று பயந்து கட்சியின் எம்எல்ஏ எம்பிக்களை சந்தித்து வருகிறார், ஆதலால் இனி வரும் காலங்களில் பீஹாரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் யோசிக்க முடியாத அளவிற்கு அரசியல் மாற்றம் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஒரு தலைவர் மீது அதிருப்தியில் உள்ள கட்சியின் எம்எல்ஏ எம்பிக்கள் அதிர்ப்தியில் இருக்கும் பொழுதே வேறொரு கட்சியுடன் தொடர்பில் உள்ள போது,  இது நிச்சயமாக ஒரு மாற்றத்திற்கான செய்தியாகவே கருதப்படுவதாகவும் எதிர்பாராத விதமாக திடீரென்று மகாராஷ்டிராவில் நடந்ததை போன்ற ஆட்சி மாற்றங்கள் பீகாரிலும் நடந்து அது யாருக்கு சாதகமாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!