24 special

ஆத்தி என்ன வண்டி நம்மபக்கம் திரும்புது....! அண்ணாமலை பார்வையால் பம்மிய எ.வ.வேலு...!

Annamalai,a v velu
Annamalai,a v velu

திமுகவில் முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்களை ஏற்படுத்தி திமுகவின் முக்கிய அமைச்சர்கள் உரையாற்றி வருகின்றனர், அந்த வகையில் மதுரையில் திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது அதில் நகரச் செயலாளர் மற்றும் அமைச்சர் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும் அமைச்சர்  எ வ வேலு பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வேலு பேசும் பொழுது 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை 60 ஆண்டு கால சட்டசபை உறுப்பினர் இந்த இரண்டையும் பெற்றவர் கருணாநிதி, எந்த ஒரு தேர்தலிலும் தோல்வி அடையாத ஒரு தலைவர் என்றால் அவர் தான்! ஒவ்வொரு மாவட்டத்திலும் கோவில் இருக்கோ இல்லையோ குடிநீர் தொட்டிகளை கருணாநிதி தான் ஏற்படுத்தினார். சென்னையை போன்ற சென்னை அடுத்த மாநகராட்சியாக மதுரையை உருவாக்கியதற்கு கருணாநிதி தான் காரணம். 

தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் அனைவரும் உயர் நீதிமன்றத்திற்கு செல்ல சென்னைக்கு வரவேண்டிய அவசியமில்லாமல் மதுரையில் உயர் நீதிமன்றத்தின் கிளையை அமைத்து அவர் நமக்கு பிச்சை போட்டார்!  செம்மொழி என்ற அந்தஸ்து தமிழுக்கு கிடைக்கவும் காரணமாக இருந்ததும் அவர்தான்! என்ற அமைச்சரின் உரையை கேட்டு அங்கிருந்து மக்கள் அனைவரும் முகம் சுளிக்க ஆரம்பித்தனர். இதனால் பெரும் சர்ச்சையும் எழுந்து அமைச்சரின் பேச்சு பரபரப்பாக பேசப்பட்டது. 

அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்றார் திமுகவின் அமைப்புச்செயலாளர் திரு ஆர்எஸ் பாரதி அவர்கள். சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை என்கிறார் அமைச்சர் திரு எவ வேலு அவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் திமுகவினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கண்டனத்தை தெரிவித்தார். 

இப்படி அண்ணாமலை தனது கண்டனத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அடுத்து இரண்டு மணி நேரத்தில் அமைச்சர் வேலு, தான் பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு தெரிவித்துள்ளார். அதாவது, பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பொழுது இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியது எனக்கு இன்று காலையில் தான் தெரியவந்தது அதனால் நான் அப்படி பேசியதற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன், கலைஞர் கொடுத்த கொடை தான் மதுரை உயர்நீதிமன்றம் கிளை என்று கூறுவதற்கு பதிலாக தவறான வார்த்தையை கூறிவிட்டேன் என்று செய்தியாளர்கள் மத்தியில் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இதன் பின்னணியில் இன்னும் சில நாட்களில் திமுகவின் சொத்து பட்டியலின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தைப் போன்றே வெளியிடப் போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார், அப்படி முதல் பாகத்தில் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்த பெயர்கள் அனைத்தும் தற்போது ரெய்டுகளில் சிக்கி, அமைச்சரவை மாற்றத்தில் இடம்பெற்று வருகிறது, இதில் அமைச்சர் எ.வ.வேலு பெயர் மட்டும் தான் அடிபடாமல் இருந்து வருகிறது, எங்கே நம்முடைய பெயரும் ரெய்டு அல்லது அமைச்சரவை மாற்றத்தில் இடம் பெற்று விடுமோ என்ற பயத்தில்தான் தற்போது அமைச்சர் வேலு சரணடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.