பாலிவுட் படத்தின் மூலம் உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா ரணாவத், 2006 ஆம் ஆண்டு கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதிக பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இதனால் மிக முக்கிய நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். மேலும் தேசிய விருதையும் பெற்றிருக்கிறார் கங்கனா! இவர் ஹிந்தியில் நடித்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பல திரைப்படங்கள் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் நேரடியாக தமிழ் படங்களில் கங்கனா நடித்த திரைப்படங்கள் அவருக்கு பெரும்பாலான வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. இருப்பினும் பாலிவுட் திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக அறியப்படுகிறார் கங்கனா.
இது மட்டும் இன்றி தன் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடிய தன்மை கொண்ட கங்கனா எதிரில் இருப்பவர் யார் என்பதையும் கருத்தில் கொள்ள மாட்டார், இதன் காரணமாகவே சில நேரங்களில் பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து மிகவும் கவரப்பட்டவர். இதனால் அவர் அடிக்கடி அரசியல் கருத்துக்களையும் பேசி வந்தார். இதனை அடுத்து நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் சார்பில் சண்டிகர் மண்டி லோக்கில் போட்டியிட்டார். இவர் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றியையும் கண்டுள்ளார். இதனை அடுத்து டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த கங்கனாவை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் பெண் பாதுகாவலர் குல்விந்தர் கவுர் அவரது கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. இதனை அடுத்து இது குறித்த வழக்கை விசாரிக்க சி ஐ எஸ் எப் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை எதற்காக அந்த பெண் அதிகாரி கங்கனாவை தாக்கினார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்பொழுது எதற்காக காங்கனாவை அந்தப் பெண் அதிகாரி தாக்கினார் என்பது குறித்து பெண் அதிகாரி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், கடந்த 2020 ஆம் ஆண்டு மூன்று விவசாயிகளின் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது 100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொள்கிறார்கள் எனக் கூறியிருந்தார். அவரால் அந்த போராட்டத்தை கலந்து கொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தை கூறும் போது அந்த போராட்டத்தில் என் அம்மாவும் கலந்து கொண்டிருந்தார் என கூறியுள்ளார்.
இதனை அடுத்து கங்கனாவை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்திய பொழுது, கங்கனா குறிப்பிட்ட ஒரு போராட்டத்தை மட்டும் மேற்கோள்காட்டி அதிலிருக்கும் மூத்த விவசாயி பெண்ணை குறிப்பிட்டு தனது எக்ஸ் தலை பக்கத்தில் 100 ரூபாய் காக அவர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சர்ச்சையானதை அடுத்து அதனை நீக்கிவிட்டார். இருப்பினும் இந்த விவகாரத்திற்காக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் கங்கனாவை தாக்கியுள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகு கங்கனா, தான் நலமுடன் இருப்பதாகவும், பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது அதை எப்படி கையாளுவது என்பது தான் எனக்கு கவலை என பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் கங்கனா