நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகளும் கடந்த ஜூன் நான்காம் தேதி வெளியானதை அடுத்து பத்து ஆண்டுகளின் தொடர்ச்சியாக மத்தியில் 290க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியடைந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பொறுப்பில் அமரவுள்ளது. முன்னதாக லோக்சபா தேர்தல்கள் நடைபெற்ற சமயத்திலேயே ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சட்டசபை தேர்தல்களும் நடைபெற்றது அந்த இரண்டு தேர்தல்களிலும் இதுவரை இல்லாத ஒரு சாதனையை பாஜக சாதித்துள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பாஜக மற்றும் ஜனசேனா கூட்டணியில் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளை வென்று வெற்றியை உறுதி செய்துள்ளது பாஜக கூட்டணி!.
அதேபோன்று ஒடிசாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களை வென்ற பாஜக நவீன் பட்நாயக்கின் கோட்டையை தகர்த்தியுள்ளது. மேலும் ஆந்திராவில் இதற்கு முன்பாக ஆட்சி பொறுப்பில் இருந்த ஒய்எம்ஆர் காங்கிரஸ் கட்சி இந்த முறை தோல்வியை தழுவியுள்ளது. மேலும் ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியின் இந்த வெற்றியானது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆட்சி காலத்தில் தெலுங்கு தேச கட்சியும், சந்திரபாபு நாயுடுவும் பல வகையில் பல விமர்சனங்களையும் பின்னடைவுகளையும் தொடர்ச்சியாக சந்தித்து, அனைத்தையும் இழந்து சந்திரபாபு நிற்கதியில் நின்று கொண்டிருந்தார். ஆனால் அதிலிருந்து மீண்டு தற்போது வெற்றி பெற்று மீண்டும் தனது ஆட்சியை ஆந்திராவில் வியாபித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. இதற்காக பலதரப்பிலிருந்து பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக சந்திரபாபு இருந்த பொழுதும் சூப்பர் ஸ்டார் அவரை சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, அரசியலில் இறங்கப் போவதாக சூப்பர் ஸ்டார் அறிவித்து பிறகு உடல்நிலை காரணமாக அரசியலில் இருந்து பின் வாங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய்லர் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த பிறகு ஆன்மீக பயணங்களை மேற்கொண்டதோடு சில முக்கிய அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து வந்தார். அதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். மேலும் தெலுங்கு தேசம் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த பொழுது நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு குறித்து மிகவும் பாராட்டி பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில், முன்னாள் நடிகையும் எம்பியுமான ரோஜா, ஒருமுறை பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சூப்பர் ஸ்டார் என்றால் ஒரு டாப் என ஒரு ரேஞ்சில் வைத்திருந்தோம்.
ஆனால் இப்போ அவர் ஜீரோ ஆகிட்டார், ரஜினி சார் பாலிடிக்ஸ் வேணாம் என ஒதுங்கி விட்டார் என பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு சூப்பர் ஸ்டாருக்கு மரியாதை அளித்து சந்திரபாபு நாயுடு குறித்து சூப்பர் ஸ்டார் ஒரு நிகழ்ச்சியில் அவரை புகழ்ந்தும் அவரது அரசியல் குறித்த நகர்வுகளை பாராட்டியும் பேசி உள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், அன்று சூப்பர் ஸ்டார் சந்திரபாபு நாயுடு குறித்து பேசியது அனைத்தும் தற்போது நிஜமாகுவது போன்ற ஒரு சூழ்நிலையும் அமைந்துள்ளது. இதனால் ரோஜாவை சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் மற்றும் பல நெடிசன்களும், உன் ஊரு உன் ஆட்சி அங்க வந்து ஒருத்தரு தைரியமா எதிர்கட்சி தலைவரா பாராட்டி பேசிட்டு போறாருனா அவரு எவளோ பெரிய ஆளா இருப்பாரு.. அவர்கிட்டலாம் வாலாட்டலமா ஒத்த ரோசா.. சிங்கம் சிங்கம்தான் என ரோஜாவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.