அதிமுக நேற்று பாஜகவுடன் கூட்டணியானது இனிமேல் எப்போதும் இல்லை என தெரிவித்தது. இந்த முடிவின் மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்திக்க இருக்கும் பிரச்சனையானது திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி போலவே சிறையில் இருப்பது போல் அதிமுகவுக்கும் நேரம் வந்து விட்டது என்ற கூறலாம்.
கூட்டணியில் இருந்து பாஜகவை பிரிக்க அதிமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்களே காரணமாவர், அதன்படி முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஆரம்பத்தில் இருந்தே பாஜகவை மட்டம் தட்டி பேசி சர்ச்சையை உண்டாக்கினார். சமீபத்தில் இவர் தான் பாஜக எங்களது கூட்டணியில் இல்லை என பேச தொடங்கி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தினார். முழுவதுமாக ஆராய்ந்தது பார்த்ததில் ஜெயக்குமாரின் மகன் ஜெயவரதனுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்களவை சீட்டு வேண்டி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துள்ளார். இவரை போன்று பல முக்கிய தலைவர்கள் வாரிசு அரசியல் வேண்டி அதற்கு தடையாக இருந்த பாஜகவை வெளியில் அனுப்ப போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் சந்திக்க இருக்கும் பிரச்சனையானது!
வரும் காலத்தில் அதிமுக சந்திக்கும் பிரச்னை?
திமுக அமைச்சரை தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் சிறை வசம்?
அதிமுக என்னதான் தேசிய கட்சியில் இருந்து நாங்கள் விளக்கி விட்டோம் என்று கூறினாலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னதாகவே 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் அனைத்து கட்சி அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறினார், அந்த வகையில் தான் அதிமுகவில் இருந்து திமுக சென்ற செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கிறார். அது போலவே தற்போது கூட்டணி முறித்த அதிமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை எந்நேரம் வேண்டுமானாலும் வெளியிட தயாரான நிலையில் இருக்கிறார் அண்ணாமலை.
ஏற்கனவே பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு கொடநாடு கொள்ளை வழக்கு நிலவில் உள்ளது அவரை தொடர்ந்து, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, கே.சி. வீரமணி, சி, விஜயபாஸ்கர் மற்றும் தங்கமணி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இவர்கள் அனைவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனை தனி நீதி மன்றம் வரும் காலகட்டத்தில் எடுத்து விசாரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நிச்சயம் செந்தில் பாலாஜி போலவே இருக்க கூடும் என தெரிகிறது. அந்த பட்டியலில் இன்னும் எதனை அதிமுக அமைச்சர்கள் சிக்க போறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு?
இதைவிட ஒரு பெரிய வழக்கு நிலுவையில் உள்ளது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு கட்சி எடப்பாடி வசம் வந்தது அப்போது துணை முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வம், முதலமைச்சர் எடப்பாடி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தனிமையில் பன்னீர் செல்வம் சென்றார். தொடர்ந்து அவர் அதிமுகவின் லெட்டர் பேட் மற்றும் இரட்டை இலை சின்னம் பயன்படுத்தி வந்தார். பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி தரப்பு தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதே போல் பன்னீர் செல்வம் தரப்பும் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதுவரை எடப்பாடிக்கு உறுதுணையாக இருந்த பாஜக கட்சி தற்போது முறிவின் மூலம் எடப்பாடி தரப்புக்கு எந்த வித சப்போர்ட்டும் இல்லாமல் ஊசலாடி வருகிறது. ஒரு வேலை தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கப்பட்ட்டாலோ அல்லது பண்ணீர்செல்வம் தரப்பினர் பக்கம் மாறினாலோ எடப்பாடிக்கு டும்...டும் தான் என்று கூறப்படுகிறது.
இப்படி அதிமுகவினருக்கு திரும்பும் திசையெல்லாம் அடி காத்து கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று ஒதுங்கியது தவறான முடிவு என்று கருத்துக்களை முன் வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அடுத்த மாதம் முதலே இந்த வழக்குகள் விசாரிக்க ஆரம்பித்தால் அதிமுக மேலும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கின்றனர்...