எல்லையில் காவல் பணியில் இருக்க கூடிய இந்திய இராணுவ வீரர் வேதனையுடன் கையெடுத்து தமிழக டிஜிபிக்கு வீடியோ வெளியிட்டு இருப்பது பார்ப்பவர்கள் மனதை வேதனை அடைய செய்துள்ளது.
ஐயா டிஜிபி அய்யா என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் நான் எல்லையில் பணியில் இருக்கிறேன், ஆனால் எனது குடும்பத்தை 120 மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடி எனது மனைவியை அடித்து இருக்கிறார்கள், எனது மனைவி நடத்திவந்த கடையை அடித்து நொறுக்கி விட்டார்கள் என வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்.
நான் காவல் காக்கும் இடத்தை பாருங்கள் என எல்லை பகுதியை காட்டிய இராணுவ வீரர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை காப்பாற்றுமாறு மண்டியிட்டு வேதனை தெரிவித்து இருக்கிறார்.
ஒரு இராணுவ வீரனாக நான் இவ்வாறு கேட்க கூடாது இருப்பினும் உங்களிடம் கேட்கிறேன் என வேதனையுடன் இராணுவ வீரர் பேசி இருக்கிறார், தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு சட்ட விதி மீறல்கள் அறங்கேறிவரும் வேலையில், இராணுவ வீரர்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகி விட்டதா? என்ன நடக்கிறது தமிழகத்தில் என பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.உடனடியாக தமிழக டிஜிபி இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது...?