தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நீண்ட நாட்களாக விவாதிக்கப்படும் தலைப்பு திராவிட மாடல் சிறந்ததா? தேசிய மாடல் சிறந்ததா? என்ற கேள்விதான், இதனை தமிழகத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்று விவாதத்திற்கு ஏற்பாடு செய்தது விவாதத்தில் பாஜகவை சேர்ந்த மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார்.
எப்போதும் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் பேசும் போது நகைச்சுவையாக தொடங்கி இறுதியில் அதிரடியாக தனது கருத்தை முடிப்பார் அதே போன்றுதான், தனியார் ஊடகத்தில் அவரது கருத்து இடம்பெற்றது, திராவிட மாடல் சிறந்ததா? தேசிய மாடல் சிறந்ததா என்ற பேச்சிற்கே இடமில்லை தேசியத்தில் தான் திராவிடம் வருகிறது.
தேசிய கீதத்தில் திராவிடம் என்பதையும் சேர்த்து தான் பேசுகிறோம், திராவிடம் என்பது புவியியல் ரீதியானது தவிர, இன ரீதியானது இல்லை என ஒரே போடாக போட்டார். நான் மதுரையில் இருந்து வருகிறேன் நான் மதுரை காரன் என்றால் அது ஒரு இனமாக மாறுமா? என நெத்தியடி கேள்வி எழுப்பினார்.
இடையில் விவாதத்தை தொகுத்து வழங்கிய தம்பி தமிழரசன் குறுக்கு கேள்வி கேட்க, அவருக்கு பேராசிரியர் கொடுத்த பதில் நெத்தியடியாக அமைந்தது, திராவிடன் என சொல்ல வேண்டியது எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபோது மலையாளி என முரசொலியில் விமர்சனம் செய்யவேண்டியது, வைகோ அரசியலுக்கு வந்த போது தெலுங்கன் என விமர்சனம் செய்ய வேண்டியது இதுதான் திராவிட மாடலா என வெளுத்து எடுத்துவிட்டார் பேராசிரியர்.
தமிழகத்தில் வரலாற்றை நினைவு படுத்தி நிகழ் கால சம்பவங்களுடன் ஒப்பிட்டு பதிலடி கொடுப்பதில் இவரை மிஞ்சிய ஆள் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை தனது விவாத கருத்துக்கள் மூலம் நிரூபித்துள்ளார் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன். அவரது பேச்சின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது :