24 special

மீண்டும் "விஸ்வரூபமெடுக்கும் முரசொலி" வழக்கு நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு !

stallin
stallin

சென்னை :  திமுகவின் பத்திரிக்கையான முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும்இதுகுறித்து அன்றைய தேசிய பட்டியல் பிரிவு நல ஆணையத்திடம் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் புகார் மனு கொடுத்து இருந்தார்.


பிஜேபி பிரமுகர் தடா பெரியசாமி என்பவர் முரசொலி நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க மூலபத்திரம் குறித்து ஆவணங்களை வெளியிடமுடியுமா என திமுக தலைமையை கேட்டிருந்தார். மேலும் அது பஞ்சமி நிலம்தான் தடா பெரியசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தமிழக பிஜேபி தலைவராக இருந்தபோது வேலூரில் பிஜேபி சார்பில்  நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் திமுகவின் பத்திரிக்கையான முரசொலி பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது எனவும் மூலப்பத்திரத்தை காட்ட தயாரா எனவும் கூட்டத்தில் பேசியிருந்தார். அதைதொடர்ந்து  திமுக எம்பியும்  முரசொலி அறக்கட்டளை நிர்வாகியுமான  ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அமைச்சர் முருகன் மீது அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.

அந்தநேரத்தில் எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதால் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் அமைந்துள்ள எம்பி.எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமைச்சர் முருகனை ஏப்ரல் 22 அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. 

அன்று அவர் ஆஜராகாததால் மே 2 க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அவதூறு வழக்கு குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனிடையே தன்மீது போடப்பட்ட அவதூறு வழக்கை ரத்துசெய்ய கோரியும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும், மத்திய அமைச்சர் முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த மனு நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா அவர்களின் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும் அமைச்சர் முறுகல் நேரில் ஆஜராக விலக்கு அளித்ததோடு வழக்கு குறித்து முரசொலி அறக்கட்டளை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 20க்கு ஒத்திவைத்துள்ளார். அன்றைய தினத்தில் முரசொலி கட்டிடத்தின் மூலபத்திரம் சமர்ப்பிக்கப்பட உத்தரவிடப்படும் என கூறப்படுகிறது.