தமிழ்நாட்டின் முன்னணி நடிகர், தென் இந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், கேப்டன் என்று பல்வேறு அடையாளங்களைக் கொண்ட விஜயகாந்த் தற்போது நம்மிடம் இல்லை... அவரது சினிமா பயணத்தில் உச்சம் பெற்ற விஜயகாந்த், அரசியல் பயணத்தில் சற்று சறுக்கல்களை தான் சந்தித்தார் என்றே சொல்லலாம், கட்சியில் உறவினர்களின் இடையூறு, சரியான வழிகாட்டுதல் இல்லை, விஜயகாந்தின் பின்னாள் இருந்து செய்த துரோகம் மேலும், அதிமுக - தேமுதிக கூட்டணியின் முறிவு, திமுக - தேமுதிக கூட்டணி வைக்காததற்கு இவர்கள் தான் போன்ற பல்வேறு காரணங்களை கூறலாம்...மதுரையில் அரிசி ஆலை நடத்தி வரும் சாதாரண குடும்பப் பின்னணியை கொண்ட விஜயராஜ் , நடிப்பு மீது ஆர்வம் கொண்டு சினிமாவில் நடித்து பிறகு தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்ற கிளைகள் தொடங்கும் அளவிற்கு பிரபலமடைந்தார்.
விஜயகாந்த் அன்போடு பழகும் விதம் திரைத்துறையினர் மத்தியில் விஜயகாந்த் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்தியது. குறிப்பாக விஜயகாந்த் படப்பிடிப்புகளில் யாரும் உணவு சாப்பிடாமல் இருந்தது கிடையாது என்று சொல்லும் அளவிற்கு உணவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தார். அவர் அனைவரையும் அரவணைக்கும் வீதம் விஜயகாந்த் மேலும் வளர்ச்சிக்கு அழைத்து சென்றது.இப்படி சினிமாவில் தனது ஆபார வளர்ச்சியை தொடர்ந்து அடுத்த சில வருடங்களில் அரசியலுக்கான தனது பணிகளை தொடங்கினர் விஜயகாந்த் . தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக பெயரை மாற்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சமூக நல பணிகளை முன்னெடுக்க தொடங்கினார். குறிப்பாக தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் எம்ஜிஆர் பெயருக்கு அடுத்து அதிகம் பேசப்பட்ட நடிகரின் பெயராக விஜயகாந்தின் பெயர் மாறியது.
இந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை உள்ளாட்சி தேர்தலில் களம் இறக்கினார். தமிழ்நாடு முழுவதும் போட்டியிட்ட விஜயகாந்தின் ரசிகர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றனர். அதோடு அதிகளவிலான வாக்குகளையும் பெற்றனர். இது தமிழ்நாடு அரசியலில் விஜயகாந்த் மீதான பார்வையை அதிகரிக்கச் செய்தது.அதை தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அன்று விஜயகாந்திற்கு ஆதரவாக அதிமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த பன்ருட்டி ராமச்சந்திரனும் தேமுதிக இணைந்தார். திமுக, அதிமுகவிற்கு மாற்று என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட விஜயகாந்த், அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் 8 சதவீதம் வாக்குகள் வரை பெற்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். குறுகிய காலத்தில் இத்தனை சதவீதம் வாக்குகளை பெற்றது விஜயகாந்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்தது.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கிய தேமுதிக 10 சதவீத வாக்குகளை பெற்றது. இது தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் ஆளுமைகளாக இருந்த கலைஞர், ஜெயலலிதாவையும் கூட பதற்றம் அடைய செய்தது. இதன் தொடர்ச்சியாக 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டனர். அந்த தேர்தலில் அதிமுக ஆளும் கட்சியாகவும் தேமுதிக எதிர்க்கட்சியாக மாறியது. அதன் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் எதிர்க்கட்சித் தலைவராக சென்ற விஜயகாந்த். பிறகு தன்னுடைய காரரான பேச்சாள் எதிர்ப்பை சந்திக்க தொடங்கினார். இதுவே அதிமுகவிற்கும், தேமுதிகவிற்கும் நேரடியான சண்டை ஏற்பட காரணமாக மாறியது. அதன் பிறகு தேமுதிகவை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் அதிமுகவில் ஐக்கியமாயினர். இது தேமுதிகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது.
பின்னர், யாருடன் கூட்டணி வைக்கலாம் என்ற ஆலோசனை நடைபெற்ற போது திமுகவுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் தேமுதிக மீண்டும் ஒரு இடத்தை பிடிக்கும் என கட்சி நிர்வாகிகள் யோசனை தெரிவித்தனர். அதனை அமைதியாக ஏற்று கொண்ட விஜயகாந்த் , திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற தகவல் வந்தது. ஆனால் திடீர் திருப்பமாக தேமுதிக மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி வைத்தது. இதற்கு பின்புலம் பல அரசியல் நடந்ததாக தேமுதிக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். திமுகவோடு கூட்டணி வைக்கவில்லை என்று தெரிந்ததும், கட்சி நிர்வாகிகள் அதிர்ந்து போயினர். மக்கள் நல கூட்டணியோடு சேர்ந்து போட்டியிட்டால் தொகுதிக்கு குறைபட்ச ஓட்டுகள் கூட வாங்க முடியாது என்றும் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என விஜயகாந்திடம் வற்புறுத்தியுள்ளனர்.ஆனால் மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி என்ற முடிவு விஜயகாந்தால் எடுக்கப்பட்டதல்ல என்றும், கட்சி விஜயகாந்த் கட்டுபாட்டில் இல்லை.
விரேமலதா கட்டுபாட்டில் உள்ளது என்பது பின்னாளில் தங்களுக்கு தெரிந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பிரேமலதா தான் அவசர அவசரமாக வைகோவை தனியாக சந்தித்து இந்த கூட்டணி முடிவை எடுத்தார். திமுக பிரமுகர் ஒருவரை சந்தித்து விஜயகாந்த் திமுகவோடு ஒத்து கொண்டார். அதன்பிறகு அந்த தகவல் கருணாநிதிக்கு சொல்லப்பட்டது. அதனால் தான் பழம் கனிந்து பாலில் விழும் என கருணாநிதி அப்போது தெரிவித்தார். மேலும், நேர்காணலுக்கு வந்தவர்களிடமும் திமுகவோடு கூட்டணி குறித்து பேசி வருகிறேன் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார். இதனிடையே திமுகவிடம் பேரம் பேசப்பட்டதாகவும், திமுக தேமுதிகவுக்கு பணம் கொடுத்ததாக வைகோ சொன்னது அவருக்கு விஜயகாந்திற்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் பிரேமலதா இடையூறு போன்ற பல்வேறு காரணங்களினால் தான் திமுகவிடம் - தேமுதிக கூட்டணி வைக்காமல் போனது என சொல்லப்பட்டது.
பின்னர் , 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிகள், மதிமுக, விசிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் மக்கள் நல கூட்டணியை உருவாக்கினர். இதன் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் மிகப் பரபரப்பாக பேசப்பட்ட மக்கள் நல கூட்டணி நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வந்த விஜயகாந்த் தற்போது நம்மிடம் இல்லை. காற்றில் கலந்த விஜயகாந்த் போன்று அவரது கட்சியும் கானல் நீர் போன்று போயிடவிடகூடாது என்றும் தேமுதிக பொதுச்செயலாளராக வந்துள்ள பிரேமலதா விஜயகாந்த் சரியான முடிவு எடுத்து கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்பதே கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது.