![vijayakanth](https://www.tnnews24air.com/storage/gallery/VjW3gf72uWKsnE1fLu3WFYQ2ZJ4o0a14wlesSC8T.jpg)
சினிமாவில் நடிக்க தொடங்கிய நடிகர் விஜயகாந்த் மக்களுக்கு உதவி செய்வதில் முன் வந்தார், இதனால் தனக்கென்று ஒரு அரசியல் கட்சியை 2005ஆம் ஆண்டு தொடங்கிய நடிகர் விஜயகாந்த் தேமுதிக தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கி மக்களுக்கு பல உதவிகளை செய்ததும் எம்ஜிஆர்க்கு பிறகு நடிகர் ஒருவர் அரசியல் கட்சி தொடங்கிய பெருமை விஜயகாந்துக்கு மட்டுமே. கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று கடைசி காலம் வரை திராவிட கட்சியுடன் கூட்டணி வைக்காமல் இருந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.2005ம் ஆண்டு கட்சி தொடங்கிய நாளில் இருந்து தனித்து போட்டி விஜயகாந்த் கடவுளுடன் மட்டுமே கூட்டணி என 234 தொகுதிகளிலும் தனித்து நின்றார். திமுக, அதிமுகவுக்கு அடுத்து 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வார்டு வாரியாக உறுப்பினர்களை தேமுதிக கொண்டிருந்தது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இருவரின் சறுக்கலுக்கும் விஜயகாந்த் காரணமாக இருந்தார். முக்கியமாகப் பெரிதும் நம்பிக்கையுடன் இருந்த அதிமுக தோல்வி அடைந்தது. இதனால் விஜயகாந்த் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
'கேப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்ததால் கேப்டன் என அன்போடும் எம்ஜிஆர் போல் உதவி செய்ததால் கருப்பு எம்ஜிஆர் என்றும் அழைக்கப்பட்டார். விஜயகாந்த் பொதுக்கூட்டம் கூட்டினால் அலைகடல் என மக்கள் வெளியூரில் இருந்து திரண்டு வரக்கூடும் மக்களுக்கு காசு கொடுக்காமல் கூட்டம் என்றால் அது விஜயகாந்துக்கு என்ற பெயர் பெற்றவர் கேப்டன்.தேமுதிக தமிழகத்தில் பெரிய ஒரு கட்சியாக உருவெடுத்தது, திமுகவின் 2006-2011 ஆட்சியால் கோபமுற்ற எதிர்க்கட்சிகள் அதிமுகவுடன் இணையத் தொடங்கின. விஜயகாந்தும் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன் அதிமுகவுடன் இணைந்தார். இந்தத் தேர்தலில் 41 இடங்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 29 இடங்களை தேமுதிக கைப்பற்றியது. 2011ஆம் ஆண்டு எதிர்க்கட்சி வரிசையில் திமுகவை விடப் பெரிய கட்சியாக அமர்ந்த தேமுதிக, அதன் பின்னர் ஆளும் அரசோடு நட்பு பாராட்டி மக்களுக்கான பிரச்சினைகளுக்காகப் பேசி கட்சியை வளர்ப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை அதிமுகவுடன் ஏற்பட்ட மோதல் போக்கினால் இழந்தது.
அது பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து வெளியில் வந்த விஜயகாந்த் அதன் பிறகு மக்கள் இடத்தில அவருக்கு வாகு கூறிய தொடங்கியது. திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது யார் கூட்டணியிலும் யக்ஞம் வகிக்காமல் இருந் விஜயகாந்துக்கு இதே மக்கள் அவருக்கு வாய்ப்பு கொடுப்பது குறைய தொடங்கியது. இதனால் பலரும் ஒரு மனிதன் கோபத்தில் எடுக்கும் முடிவு அவரது வாழ்கை மற்ற கூடும் என சொல்லுவது விஜயகாந்துக்கு ஒரு உதாரணமாக மாறியது. அதிமுகவில் அங்கமா வகித்த விஜயகாந்த் என் திமுகவுடன் கூட்டணி இல்லை என கேள்வி எழுந்தது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததும் திமுக செய்த இழப்பு மிக பெரிய துயரத்தை கொடுத்தது, அதவாது, கோயம்பேடு பஸ் ஸ்டேண்டுக்கு அருகே விஜய்காந்துக்கு சொந்தமான ஆண்டாள்-அழகர் திருமண மண்டபம் உள்ளது. ஆனால் எப்பவுமே கோயம்பேட்டில் டிராபிக் ஜாம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. அதனால் பஸ் நிலையப் பகுதியில் நெரிசலை தவிர்க்க ஒரு அடுக்கு மாடி மேம்பாலம் கட்ட அப்போதைய திமுக அரசு முடிவு செய்தது.
ஆனால் இதற்கு விஜயகாந்த்தின் திருமண மண்டபம் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கவே மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்க வேண்டி வந்தது. இதனால் விஜயகாந்த் மண்டபத்தை இடிக்க கூடாது என முழு எதிர்ப்பு கொடுத்து வந்தார். இதற்காக மாற்று பிளான் கொடுத்த விஜயகாந்த் அப்போது இருந் கருணநிதி ஒற்று கொள்ள வில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து மண்டபத்தின் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டது. மண்டபம் இடிந்தபோதே திமுக மீது தான் வைத்திருந்த அத்தனை நம்பிக்கையும் விஜயகாந்துக்கு இடிந்து விழுந்தது. கல்யாண மண்டபத்தை வேண்டுமென்றே இடிகிறார்கள் என்று சொன்னார் விஜயகாந்த். இதனை மனதில் வைத்தே, திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ததுடன், அதிமுகவுடன் கூட்டு வைக்கும் அளவுக்கு ஒரு மோதல் போக்கை கடைப்பிடித்தே வந்தார். அதன் காரணமாகவே திமுகவுடன் தன்னை இணைத்து கொள்ளாமல் அரசியல் வாழ்கை முடித்து கொண்டார். மேலும், திமுக விஜயகாந்துக்கு பெரும் நெருக்கடி சினிமாவிலும், வடிவேலுவையும் கைக்கூலியாக வைத்து கொண்டு செயல்பட்டதாகவும் தகவல் கூறுகிறது.